வாகன சோதனையில் டோக்கன்களால் சிக்கிய பொன்னர்

0

தமிழகம் முழுவதும் வாகன சோதனை நடத்தி வரும் தேர்தல் பறக்கும் படையினர், உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் ரொக்க பணம், தங்கம், வெள்ளி பொருட்களை தொடர்ந்து பறிமுதல் செய்து வருகின்றனர்.

பல்வேறு பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், நகை பரிசுப்பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சென்று கொண்டிருந்த வாகனத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் பொன்.ராதாகிருஷ்ணன் படம், தாமரை சின்னம் பொறிக்கப்பட்ட 10 ஆயிரம் டோக்கன்கள் இருந்ததை கண்டு பறக்கும் படையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

Comments are closed.