வாக்கிற்கு மதிப்பு வேண்டும்!

0

வாக்கிற்கு மதிப்பு வேண்டும்!

நாட்டின் பிரச்சனைகளையும், மக்களின் மனநிலையையும் அறிந்தவர்கள்தான் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் மக்களின் பிரதிநிதியாக செல்ல வேண்டும். அதுதான் மக்களுக்கு நல்லது. ஆனால் இன்றைய சூழலில் அப்படி தகுதியானவர்களும், நேர்மையானவர்களும் செல்ல முடியவில்லை. அதற்குக் காரணம் என்ன என்று யோசித்திருக்கிறோமா?

இன்றைய ஜனநாயக தேர்தல் முறை ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே பயனளிக்கிற தன்மை கொண்டது. பண பலம், ஆள் பலம், மாஃபியா பலம், ஊடக பலம் ஆகியவற்றின் கீழ்தான் சாதாரண மக்களுக்கான ஜனநாயக உரிமை இருந்து வருகிறது. தற்போதைய தேர்தல் முறையில் பணபலம் அரசியல் பலத்தை தனதாக்கிக் கொள்ள முயல்கிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 16 சதவிகிதம் பேர் கோடீஸ்வரர்களாக இருந்தனர். அது 2014ல் 27 சதவிகிதமாக அதிகரித்தது. தேர்தலில் ஒரு வேட்பாளர் இவ்வளவுதான் செலவு செய்யலாம் என ஆணையம் உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. ஆனால் ஆட்சியையும் அதிகாரத்தையும் கைப்பற்ற ‘முதலில் கொட்டுவோம். பின்னர் அள்ளுவோம்…’ என்பதுதான் பெரும்பாலான கட்சிகளின் ‘பாலிஸி’யாக உள்ளது. எனவேதான் தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் தேவை என்று பல்வேறு கட்சியினரும் பொதுநல அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Goto Index

Comments are closed.