வாக்குச்சாவடியில் கலவரம் செய்ய முயன்ற பாஜகவினர்: துப்பாக்கி சூடு நடத்திய போலிஸார்

0

உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. உ.பி.யில் கய்ரானா பகுதியில் உள்ள ரசூல்புர் வாக்குச்சாவடிக்கு அடையாள அட்டை இல்லாமல் ஒருவர் வாக்களிக்க வந்தார். அவரை காவல்துறையினர் உள்ளே விட மறுத்து வெளியே அனுப்பினர்.

இதையடுத்து, திடிரென்று காவல்துறையினர் மீது ஒரு கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தி வாக்குச்சாவடிக்குள் நுழைய முயற்சித்தது. இதனல் காவல்துறையினர் வானத்தைநோக்கி துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

வாக்குச்சாவடிக்க வந்தவரின் பெயர் சவுரவ் திரிவேதி என்றும் அவர் முன்னாள் பாஜக எம்எல்சி என்பதும் தெரிய வந்துள்ளது.

Comments are closed.