வாக்குச்சாவடியில் ”நமோ” உணவை விநியோகம் செய்த போலிஸார்

0

உத்தர பிரதேசத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கு ”நமோ” பெயர் பொறித்த உணவு பார்சல் வழங்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குபதிவு இன்று நடைபெற்று வருகிறது. ஆந்திர பிரதேசம், அருணாசலப்பிரதேசம், உத்தரகாண்ட், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், அந்தமான் மற்றும் நிக்கோபார், லட்சத்தீவு, தெலுங்கானா, சாம், பீகார், சட்டீஸ்கர், ஜம்மு காஷ்மீர், மஹாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, திரிபுரா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதில் உத்தர பிரதேசத்தில் நொய்டா தொகுதியில் தேர்தல் அதிகாரிகளுக்கு ”நமோ” என பெயர் பொறித்த உணவு பார்சல் வழங்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காவி நிற பாக்கெட்டில் பேக் செய்யப்பட்டு இருந்த அந்த பார்சலில் நமோ என்று எழுதப்பட்டு இருந்தது. போலீஸ் அதிகாரிகளே இந்த உணவு பொட்டலங்களை வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸ் காரில்தான் இந்த பொட்டலங்கள் எடுத்து வரப்பட்டு இருக்கிறது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.

Leave A Reply