வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயற்சிக்கும் பாஜக: கண்டுக்கொள்ளாத தேர்தல் ஆணையம்!

0

மக்களவை தேர்தலுக்கு பதிவான வாக்குகள் அனைத்தும் வருகின்ற 23ம் தேதி எண்ணப்படவுள்ளது. இதற்கான பணிகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களை பாஜகவினர் மாற்ற முயற்சிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் ஆதாரங்களோடு முன் வைத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தனியார் வாகனத்தில் எடுத்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Comments are closed.