வாக்குப்பதிவு இயந்திரத்தை கீழே போட்டு உடைத்த வேட்பாளர்!

0

ஆந்திரா மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக 25 மக்களவை தொகுதிக்கான தேர்தல் மற்றும் அந்த மாநிலத்தின் 175 சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடந்து வருவதால், மக்கள் ஆர்வமுடன் வாக்களித்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கூட்டி வாக்குச்சாவடியில் ஜனசேனா கட்சியை சேர்ந்த சட்டப்பேரவை வேட்பாளர் மதுசூதன் குப்தா வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் மற்றும் வேட்பாளரின் பெயர் சரியாக தெரியாததால் கீழே போட்டு உடைத்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த மதுசூதனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply