வாக்கு சேகரிக்க சென்ற எடப்பாடி மீது செருப்பு வீச்சு

0

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரத்தநாட்டில் பிரசாரம் செய்துகொண்டிருக்கும்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் அவர் மீது செருப்பை வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் காந்தி, கூட்டணிக் கட்சியான த.மா.கா வேட்பாளர் என்.ஆர்.நடராஜன் ஆகியோருக்கு வாக்குகள் சேகரித்து தஞ்சாவூரில் பல பகுதிகளில் நேற்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அதன் பிறகு இரவு சுமார் 8.45 மணியளவில் ஒரத்தநாடு பேருந்து நிலையத்தில் பிரசாரம் செய்தார்.

பிரசார வாகனத்தில் மேல்பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வேட்பாளர் நடராஜன், அதிமுக-வின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆகியோர் நின்றுகொண்டிருந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் சாதனைகளைச் சொல்லி தாமாகவுக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தில் வாக்களிக்குமாறு பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி நோக்கி ஒருவர் செருப்பை வீசினார். இதனால் எடப்பாடி பழனிசாமி கடும் கோபம் அடைந்து, உடனே பேச்சை முடித்துக்கொண்டார். செருப்பு வீசிய நபரை வைத்திலிங்கத்தின் மகன் பிரபு கடுமையாகத் தாக்கியுள்ளார்.

கஜா புயல் சமயத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை வைந்திலிங்கத்தின் சொந்த ஊரான தெலுங்கன் குடிகாட்டில் சாலைமறியல் செய்து அமைச்சர்களை மக்கள் முற்றுகையிட்டனர்.

மேலும் செருப்பு வீசியதன் காரணமாக அவரை காவல்துறையினர் கைது செய்தது.

Comments are closed.