வாட்ஸ்அப் குழுவிற்கு ஆபாச படங்களை அனுப்பிய கர்நாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர்

0

கர்நாடகாவை சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் மகந்தேஷ் கவடகிமத் என்பவர் செய்தி மற்றும் தகவல்களை பகிரும் வாட்ஸ்அப் குழுமம் ஒன்றில் பல ஆபாசப் படங்களை பகிர்ந்துள்ளார் என்று News 18 தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த குழுமத்தில் பல மூத்த அதிகாரிகள், எம்.பி.க்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து விளக்கமளித்துள்ள மகந்தேஷ், அந்த படங்கள் அனைத்தும் தவறுதலாக அனுப்பப்பட்டுவிட்டது என்றும் தான் புதிதாக வாங்கிய டச் ஸ்கிரீன் மொபைல் பயன்படுத்துகையில் இது நிகழ்ந்துவிட்டது என்றும் கூறியுள்ளார். மேலும் அந்த படங்கள் எவ்வாறு அனுப்பட்டது என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வை தொடர்ந்து அந்த குழுமத்தில் உறுப்பினாக உள்ள பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்னும் சிலர் இது குறித்து மகந்தேஷ் மீது வழக்கு பதிவு செய்து அவர் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

2012 ஆம் ஆண்டு இதே கர்நாடகாவில் சட்டமன்றத்தில் முதல் வரிசையில் வைத்து ஆபாச படங்களை பார்த்த பாஜக அமைச்சர் கையும் களவுமாக பிடிபட்டார். இன்னும் அவரது போனில் உள்ள அந்த ஆபாச படங்களை எட்டிப்பார்த்த மேலும் இரண்டு அமைச்சர்களும் கேமராவில் சிக்கனர்.

Comments are closed.