வாட்ஸ் அப்பில் இஸ்லாமிய வெறுப்புணர்வு!

0

வாட்ஸ் அப்பில் இஸ்லாமிய வெறுப்புணர்வு!

சமூக ஊடகமான வாட்ஸ்அப்பில் சமீப நாட்களாக முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகளவில் பரப்பப்படுவதை நாம் கண்டு வருகிறோம். பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தோர் அல்லது அதன் ஆதரவு குழுமங்கள்தான் இதில் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

“உண்மையோ அல்லது பொய்யோ… ஒரு செய்தியை நம்மால் வைரலாக்க முடியும்” 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நடைபெற்ற சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டத்தில் பா.ஜ.க. தேசியத்தலைவர் அமித்ஷா உதிர்த்த வார்த்தைகள் இவை.

“சமூக ஊடகத்தை பயன்படுத்தி நாம் மத்தியிலும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியை அமைக்க வேண்டும்; அதற்காக செய்திகளை வைரலாக்க வேண்டும் (அதிகம் பகிர வேண்டும்). நாம் ஏற்கெனவே உத்தர பிரதேசத்தில் 32 இலட்சம் மக்களை உள்ளடக்கிய வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கியுள்ளோம். ஒவ்வொரு நாளும் காலை 8 மணிக்கு அவர்களுக்கு செய்திகள் அனுப்பப்படுகின்றன” என்றும் கூறினார்.

விஷமப் பிரச்சாரங்கள் எப்படி உண்மை போல் மக்கள் மனதில் பதியும், அனுமான செய்திகளை உண்மை செய்திகள் போல் மக்கள் உள்ளத்தில் எப்படி தாக்கத்தை உண்டாக்கலாம்?, அதில் இந்த காலகட்டத்தில் வாட்ஸ்அப் எப்படி வரப்பிரசாதம்? இதில் பா.ஜ.க. எப்படி வல்லவர்கள்? என்ன மாதிரியான தயாரிப்பில் பா.ஜ.க. உள்ளது? போன்ற விபரங்கள் அடங்கிய அமித்ஷாவின் பேச்சுக்கள் இன்றும் அவர்களின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் உள்ளன.

இந்தியாவில் 70 சதவிகிதம் உள்ள இந்துக்கள் 15 சதவிகிதம் உள்ள முஸ்லிம்களால் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள் என்ற எண்ணத்தை இவர்களால் மக்கள் மனதில் விதைக்க முடிந்துள்ளது. இது காலங்காலமாக இவர்கள் செய்து வரும் பிரச்சாரம்தான் என்றாலும் தற்போது சமூக ஊடகங்களை பயன்படுத்தி இந்த பிரச்சாரத்தை அதிகப்படுத்தியுள்ளனர். இந்தியாவில் சமூக ஊடகங்களை பயன்படுத்தி பா.ஜ.க. செய்யும் தகிடுதத்தங்களைதான் உலகின் பல நாட்டவர்களும் செய்கின்றனர். பிரேசில், ஸ்பெயின், மியான்மர், பிலிப்பைன்ஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அரசுகள் சமூக ஊடகத்தை பயன்படுத்தி பொய்யையும், வெறுப்பையும் பரப்பி அதிகாரத்தை அடைந்தன. அரசியல் இலாபத்தையும் அறுவடை செய்தன.

அதிகாரத்தை அடைய பிரச்சாரம் என்பது முக்கிய ஊடகம். அதன் படிவங்கள் மட்டுமே மாறியுள்ளன.

“மக்கள் மனதில் ஒரு சித்தாந்தத்தை விதைத்து அந்த சித்தாந்தம் அவர்களின் சொல்லிலும், செயலிலும் வெறியாக மாற்றப்படாத வரை எந்தமாதிரியான புத்திசாலித்தனமான பிரச்சார யுக்தியும் பலனை தராது” என்பது நாசிசத்தின் நாயகன் அடால்ப் ஹிட்லரின் வார்த்தைகள் ஆகும்.

2012 ஆம் ஆண்டு வாஷிங்டன் மத்திய பல்கலைக்கழகத்தை சார்ந்த டேனியல் பொலாக் என்பவர் சுவாரஸ்யமான ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். உண்மை என்று நம்ப வைக்கப்பட்ட சில செய்திகளை அவர் மக்களிடம் காண்பித்தார். ஐந்து வாரங்கள் கழித்து, இந்த செய்திகளை அறியாதவர்களை விட இவற்றை வாசித்தவர்கள் செய்திகளை உண்மை என்று ஒப்புக் கொண்டனர். அது மட்டுமன்றி, தவறான செய்திகளை தொடர்ந்து பரப்புவது அவற்றின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என்பதையும் இந்த ஆய்வு வெளிப்படுத்தியது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.