வான்வெளியில் மோடி விமானம் பறக்க பாகிஸ்தானிடம் அனுமதி கேட்ட இந்தியா

0

மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுள்ள நரேந்திர மோடி மீண்டும் வழக்கம்போல் தனது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை தொடங்கி உள்ளார். இதன் காரணமாக அவரது விமானம் பாகிஸ்தான் வான்வெளி வழியாக பறந்துசெல்ல அனுமதி அளிக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு இந்திய அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

புல்வாமா தற்கொலை படை தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் வான்வெளியில் அயல்நாட்டு விமானங்கள் பறக்க அந்நாட்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தடை விதித்தது. அந்த தடை தற்போது வரை நடைமுறையில் உள்ளது.

சமீபத்தில் முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பிஷ்செக் நகருக்கு செல்வதற்காக பாகிஸ்தான் வான்வெளியியில் பறக்க இந்திய அரசு சார்பில் அனுமதி கோரப்பட்டது அதற்கு பாகிஸ்தான் அரசும் அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில், தற்போது மோடிக்கும் அனுமதி கோரப்பட்டுள்ளது.

Comments are closed.