வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிடவுள்ள சாமாஜ்வாதி வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு

0

சமாஜ்வாதி கட்சி சார்பில் வாரணாசி வேட்பளராக அறிவிக்கப்பட்ட எல்லை பாதுகாப்பு படை முன்னாள் வீரரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பா.ஜ.க சார்பில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரை எதிர்த்து சமாஜ்வாதி கட்சி சார்பில் எல்லை பாதுகாப்பு படை முன்னாள் வீரர் தேஜ் பஹதூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இவர் கடந்த 29ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படையில் பணியாற்றியவர்கள் தேர்தலில் போட்டியிட அவர்கள் பணி புரிந்த இடத்தில் இருந்து தடையில்லாத சான்று பெற்று வர வேண்டும் என்கிற விதியை பின்பற்றவில்லை என்று கூறி அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுகுறித்து தனக்கு உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்றும் தேஜ் பஹதூர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.