வாருங்கள்! ஒன்றிணைந்து தேசம் காப்போம்!

0

வாருங்கள்! ஒன்றிணைந்து தேசம் காப்போம்!

மிக மோசமான ஒரு காலகட்டத்தை நோக்கி இந்த தேசம் நகர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக முஸ்லிம்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் தங்களுடைய வாழ்க்கையை கேள்விக்குறியாக கழிக்க வேண்டிய நிலை; எதிர்காலத்தில் இங்கு தங்களால் வாழ முடியாது என்கிற ஒரு மோசமான நிலையைதான் இன்று தலித்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், முஸ்லிம்களும் சந்திக்கக் கூடிய ஒரு அவலமான நிலையில் இந்த தேசம் சென்று கொண்டிருக்கிறது.

இச்சூழலில் இந்திய முஸ்லிம்களையும் இந்திய மக்களையும் ஒரு தன்னம்பிக்கை நிலைக்கு நகர்த்த வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் உள்ளங்களில் இருக்கக்கூடிய பயத்தை துடைத்தெறிய வேண்டும். இந்த தேசம் உருவாகுவதற்கு காரணமாக இருந்தவர்கள் முஸ்லிம்கள். இந்த தேசத்தினுடைய வளர்ச்சிக்கு அடிப்படையாக பங்காற்றியவர்கள் முஸ்லிம்கள். அப்படிப்பட்ட பாரம்பரியத்திற்கு சொந்தமான ஒரு சமூகம் இன்று மனோரீதியாக ஏதோ ஒரு தடுமாற்றதில் இருக்கிறதா? மனோரீதியாக பீதிவயப்பட்டு இருக்கிறதா?

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்க வேண்டிய அவசியமே கிடையாது. காரணம், ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏதுவாக இஸ்லாமிய வழிகாட்டுதலை அல்லாஹ்வின் வசனங்கள் கொடுக்கின்றது. எந்த ஒரு சூழலிலும் நீங்கள் சர்வாதிகாரத்திற்கும் அடக்குமுறைக்கும் அடிபணிந்து போக வேண்டிய அவசியமில்லை. அதைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியமில்லை. அதைக்கண்டு தடுமாற வேண்டிய அவசியமில்லை என்கிற அடிப்படையிலான அற்புதமான வரலாறுகளை அடுக்கடுக்காகக் கொண்டு, இறை வசனங்களையும், அண்ணலம் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையை வழிகாட்டுதலாகக் கொண்டு இந்த சமூகத்தை அவ்வப்போது பயிற்றுவிக்க கூடிய அற்புதமான கொள்கையை, சித்தாந்தத்தை, பாரம்பரியத்தைக் கொண்ட மார்க்கம் இஸ்லாம். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.