வாழ்வின் முடிவு அல்லாஹ்வின் பாதையில்!

0

வாழ்வின் முடிவு அல்லாஹ்வின் பாதையில்!

“இன்னும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும் அல்லது இறந்து விட்டாலும், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், ரஹ்மத்தும் அவர்கள் சேர்த்து வைப்பதைவிட மிக்க மேன்மையுடையதாக இருக்கும்.”(அல்குர்ஆன் 3:157)

நீதிக்கான வலுவான குரலும், உறுதியான நிலைப்பாடும், போராட்டங்களும் அநீதியின் மையங்களை மிரளச் செய்யக் கூடியவை. மனிதனின் மார்க்கம், உயிர், சொத்து, கண்ணியம் ஆகியவற்றை பாதுகாப்பதற்காகவும், அவற்றின் வளர்ச்சிக்காகவும் போராடுவது அல்லாஹ்வின் பாதையில் நடத்தும் போராட்டமாகும். அது தியாகத்திற்கான வழிகளாகும். அல்லாஹ்வின் திருப்தி, மறுமை வெற்றி, சமூகத்தில் ஆரோக்கியமான சூழல் உருவாகும்போது ஏற்படும் மன திருப்தி ஆகியன இதனால் கிடைக்கும் பலன்களாகும்.

இந்த பலன்களை தனது உலகியல் பலன்களை விட மதிப்புமிக்கதாக கருதுபவர்களுக்கே இந்த பாதையில் வெற்றியை பெற முடியும். நீதி மற்றும் சுதந்திரத்திற்காக நம்பிக்கையாளர்கள் தங்களது உயிரையே விலையாக கொடுப்பார்கள்.

சமூகம் நிலைத்திருப்பதற்கு உறைவிடமாக திகழும் உண்மை, நீதி மற்றும் சுதந்திரம்  ஆகியன தனி நபருடைய உலக வாழ்க்கையை விட மதிப்புமிக்கதாகும். அதனால்தான் இதர மக்களுக்காக தன்னுடைய உயிரை பணயம் வைத்து போராடுபவர்களுக்கு, அல்லாஹ் அழகான சுவனத்தை பரிசாக தருகிறான்.

மேலும் அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், அருளும் கிடைக்கிறது. இந்த அருட்கொடைகள் உயிர் தியாகிகளுக்கு மட்டுமல்ல, உயிரை தியாகம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்து இந்த பாதையில் இயற்கையாக மரணித்தவர்களுக்கும் கிடைக்கும்.

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.