விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சேக்கு 50 வாரம் சிறை தண்டனை!

0

ஆஸ்திரேலியாவின் ஊடகவியலாளர் ஜூலியன் அசாஞ்சே, விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவனர்களில் ஒருவராக உள்ளார். அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான், ஈராக் போர்கள் குறித்த ஏராளமான ரகசிய ஆவணங்களைத் தன் இணையத்தளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனால், சர்வதேச அளவில், ஜூலியன் அசாஞ்சேக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தது.

ஆனால், உலகளவில் மனித உரிமை ஆர்வலர்களின் பெரும் ஆதரவு ஜூலியன் அசாஞ்சேக்கு கிடைத்தது. ரகசிய ஆவணங்களை வெளியிடட்தால், விதிக்கப்பட்ட  மரணதண்டனை மற்றும் துன்புறுத்தலுக்கு பயந்து ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவில் இருந்து வெளியேறினார்.

ஆஸ்திரேலியரான இவர் அமெரிக்க குடியுரிமை பெற்று இருந்தார். அமெரிக்காவில் இருந்து வெளியேறிய அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நைட்ஸ்பிரிட்ஷ் பகுதியில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சமடைந்தார். அவருக்கு ஈகுவேடார் அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. எனவே அங்கு அச்சமின்றி நிம்மதியாக தங்கி இருந்தார்.

ஜூலியன் அசாஞ்சே, தஞ்சம் அடைந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு ஈகுவேடார் தூதரகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதற்கான உத்தரவை அந்நாட்டின் அதிபர் அளித்தார். ஈகுவேடார் தூதரகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் ஜூலியன் அசாஞ்சேவை லண்டன் போலீசார் கைது செய்துள்ளது.

இதனையடுத்து, அவருக்கு 50 வாரம் சிறை தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. ஜாமின் நிபந்தனையை ஜுலியன் அசாஞ்ச் மீறிவிட்டதாக லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Comments are closed.