விடாது ரஃபேல்

0

 விடாது ரஃபேல்

கஷ்மீரின் புல்வாமாவில் பிப்ரவரி 14 அன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 42 வீரர்கள் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் அதிர்ச்சியைஏற்படுத்திய தாக்குதலைத் தொடர்ந்து அரசாங்கம்கடும் நெருக்கடிகளையும் கேள்விகளையும் எதிர்கொண்டது. பிப்ரவரி 26 அன்று பாகிஸ்தானின் பாலக்கோடு நகரில் உள்ள ஜெய்ஷ்&-இ&- முஹம்மது தீவிரவாத அமைப்பின் முகாம்களை இந்திய விமானப் படைகுண்டு வீசிதகர்த்ததாக செய்திகள் கொடுக்கப்பட்டன. இத்தாக்குதல் நடைபெற்ற உடனேயே தீவிரவாத முகாமில் இருந்த 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் எவ்வித ஆதாரமும் இன்றி கூறின.

கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை இந்திய விமானப்படையை அறிவிக்காத நிலையில் ஊடகங்களுக்கு இந்த தகவலை கொடுத்ததுயார் என்ற கேள்வி இயல்பாக எழுந்தது. பிரச்சார பொதுக்கூட்டமொன்றில் பேசியபாரதிய ஜனதாகட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா, பாலக்கோடு தாக்குதலில் 250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவித்தார்.

புல்வாமாதாக்குதல் போன்று பாலக்கோடு தாக்குதல் குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் சந்தேகங்களை எழுப்புபவர்களை தேசதுரோகிகள் என்றும் இராணுவத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் என்றும் பிரதமர் மோடி தொடங்கி அனைத்து சங்பரிவார்களும் கூறிவருகின்றனர். பொதுக்கூட்டம் ஒன்றில்பேசிய பிரதமர் மோடி ‘‘ரபேல் விமானம் மட்டும் நம்மிடம் இருந்திருந்தால் நடந்திருப்பதேவேறு’’என்ற ரீதியில் ஆவேசமாக உரையாற்றினார். ரஃபேல் விமானத்தை வாங்குவதில் எதிர்க்கட்சியினர் தான் தேவையற்ற தடைகளை போட்டுகால தாமதத்தை ஏற்படுத்துகின்றனர் என்ற கருத்தை பரப்ப முனைந்தார் பிரதமர். ஆனால் புல்வாமா தாக்குதல் காரணமாக பின்னுக்குத்தள்ளப்பட்டு இருந்தரஃபேல்விவகாரத்தைஇதன்மூலம்தன்னையும் அறியாமல்மீண்டும் முன்னுக்குகொண்டு வந்தார் மோடி.

ரஃபேல் விவகாரம் குறித்து பல உண்மை தகவல்களை வெளியே கொண்டு வந்த ‘திஇந்து’ஆங்கில நாளிதழ் பிரதமர் பேசிய இரண்டு தினங்களில் அடுத்ததகவலை வெளியிட்டு பாரதிய ஜனதாவுக்கு அதிர்ச்சியை அதிகப்படுத்தியது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இறுதி செய்திருந்த ரஃபேல் விலை முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடிவு செய்திருந்த விலையை விட 2.86 சதவிகிதம் குறைவானது என்று கணக்கு தணிக்கை ஆணையர் அறிக்கை கொடுத்து இருந்தார். தாங்கள்ஒப்புக்கொண்டவிலைமுந்தையவிலையைவிட 9 முதல் 20 சதவிகிதம் வரை குறைவானது என்று பா.ஜ.க.வின் ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு கணக்கை கொடுத்துக்கொண்டிரந்த நிலையில் இந்த அறிக்கை வெளிவந்தது. இருந்தபோதும் இதனையும் தங்களுக்கு சாதகமாக பிரச்சாரம் செய்தனர் பா.ஜ.க.வினர்.

ஆனால் சி.ஏ.ஜி. வெளியிட்ட அறிக்கையில் இருந்த சில முரண்பாடுகளை ‘தி இந்து நாளிதழ்’ தெளிவாக்கியது. பொதுவாக வெளிநாட்டு ஒப்பந்தங்கள் செய்யப்படும் போதுசம் பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து வங்கி உத்தரவாதம் பெறுவது வழக்கம். சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒப்பந்தத்தின் படி செயல்படவில்லையென்றால்அதற்கான இழப்பை உத்தரவாதம் கொடுக்கும் வங்கி ஏற்றுக்கொள்ளும். இது தான் வங்கி உத்தரவாதம் எனப்படும். டஸ்ஸால்ட் நிறுவனத்துடனான ரஃபேல் ஒப்பந்தத்தில் இந்திய அரசு ஏற்கனவே 60 சதவிகித தொகையை கொடுத்துவிட்டதால்வங்கி உத்தரவாதம் இங்கு மிக அவசியமாகும்.

ஆனால் டஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து வங்கி உத்தரவாதத்தை பெறவேண்டாம் என்று பா.ஜ.க. அரசு முடிவு செய்தது. இதன் மூலம் பலனை அடைந்து டஸ்ஸால்ட் நிறுவனம்தான். 60,000 கோடி ரூபாய் அளவிற்கான வர்த்தகம் என்பதால் வங்கி உத்தரவாதம் என்றகணக்கில் பெரும் தொகையை டஸ்ஸால்ட் நிறுவனம் கொடுக்கவேண்டி இருந்தது. ஆனால்அதனை நீக்கி அந்நிறுவனத்திற்கு பெரும் உபகாரம் செய்தது பா.ஜ.க. அரசு. இந்த வங்கி உத்தரவாதம் தொகையை ரஃபேல் விமான விலையுடன் இணைத்திருந்தால் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இறுதி செய்த விலையை விட 1968 கோ டிரூபாய் அதிகம் வந்திருக்கும், அதாவது ஒரு போர் விமானத்திற்கு ஏறத்தாழ 55 கோடி ரூபாய் அதிகம்.

இந்த உண்மைகளுக்கு பதில் சொல்ல முடியாத பா.ஜ.க. அரசாங்கம் இத்தகவல்களை வெளியிட்ட ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் என். ராம் மீது பழிவாங்கும் போக்கை தொடங்கியது. ரஃபேல் சம்பந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் வழக்கு தொடர்பான ஆவணங்கள் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்டதாக அட்டர்னி ஜெனரல் வேணு கோபால் நீதிமன்றத்தில் தெரிவித்தார். தொலைந்துபோன இந்தஆவணங்களின் அடிப்படையில் ஊடகங்களில் செய்தி வெளியாகி இருப்பதாக கூறி ‘தி இந்து’ மற்றும் ’கேரவன்’ பத்திரிகைகள் அந்தத கவல்களை திருடியதாக மிரட்டினார். என். ராம் மீது அலுவலக ரகசிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறினார். தனக்கு தகவல்களை தந்தவர்களையோ தகவல்களைப்பெற்ற முறையையோ வெளிப்படுத்த இயலாது என்று என். ராம்தெளிவாக கூறிவிட்டார்.

நாங்கள் தகவல்களை திருடவில்லை என்றும் யாரிடம் இருந்தும் பணம் கொடுத்து தகவல்களை பெறவில்லை என்றும் என். ராம் ஆணித்தரமாகக் கூறினார். இவ்வாறு தகவல்களை பெற்று செய்திவெளியிடுவது புதிதல்ல என்றும் அதுபத்திரிகையின் பணி என்றும் எடுத்துரைத்தார். அரசாங்கத்தின் இந்த போக்கிற்கு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தனது போக்கில் இருந்து பின் வாங்கி ‘ஆவணங்கள் காணாமல் போகவில்லை’ ‘அவை நகல் எடுக்கப்பட்டன ’என்று பல்டி அடித்தார் அட்டர்னி ஜெனரல்.

2007ல் முடிவுசெய்யப்பட்ட விலையை விட இப்போதைய விலை 40 மடங்கு அதிகம் என்றும் 2012 விலையை விட 14 மடங்கு அதிகம் என்றும் ஆவணங்கள் நிரூபிக்கின்றன.  போர் விமானங்கள் வாங்குவதில் பெருமளவில் முறைகேடுகளை நிகழ்த்திநாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியுள்ள பா.ஜ.க. அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் இது என்பதை மக்கள் உணர்ந்து செயல் பட வேண்டும்.

கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் ரத்தம் காய்வதற்கு முன்னரே ‘‘இத்தாக்குதல் மூலம் கர்நாடகாவில் எங்களுக்கு 22 நாடாளுமன்ற தொகுதிகள் அதிகமாக கிடைக்கும் ”என்றார் பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா. இராணுவ வீரர்களின் சீருடையில் வீதி வீதியாகச் சென்று வெட்கமின்றி வாக்கு சேகரித்தார் டெல்லி பா.ஜ.க. தலைவர் மணிஷ் திவாரி. பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட் டவிமானப்படை விமானி அபிநந்தனின் புகைப்படத்தை நாடு முழுவதும் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகின்றனர் பா.ஜ.க.வினர். நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதுடன் இராணுவத்தினரை தங்களின் அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்தும் பா.ஜ.க. அணியினர் இனியும் ஆட்சியில் இருக்க வேண்டுமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

-ரியாஸ்

இந்த கட்டுரை 2019 மார்ச் மாதம் 16-31 இதழில் வெளிவந்தது.

Comments are closed.