விடாது ரஃபேல்

0

விடாது ரஃபேல்

கஷ்மீரின் புல்வாமாவில் பிப்ரவரி 14 அன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 42 வீரர்கள் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய தாக்குதலைத் தொடர்ந்து அரசாங்கம் கடும் நெருக்கடிகளையும் கேள்விகளையும் எதிர்கொண்டது. பிப்ரவரி 26 அன்று பாகிஸ்தானின் பாலக்கோடு நகரில் உள்ள ஜெய்ஷ் &-இ&- முஹம்மது தீவிரவாத அமைப்பின் முகாம்களை இந்திய விமானப்படை குண்டு வீசி தகர்த்ததாக செய்திகள் கொடுக்கப்பட்டன. இத்தாக்குதல் நடைபெற்ற உடனேயே தீவிரவாத முகாமில் இருந்த 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் எவ்வித ஆதாரமும் இன்றி கூறின. கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை இந்திய விமானப்படையை அறிவிக்காத நிலையில் ஊடகங்களுக்கு இந்த தகவலை கொடுத்தது யார் என்ற கேள்வி இயல்பாக எழுந்தது. பிரச்சார பொதுக்கூட்டமொன்றில் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, பாலக்கோடு தாக்குதலில் 250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவித்தார்.

புல்வாமா தாக்குதல் போன்று பாலக்கோடு தாக்குதல் குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் சந்தேகங்களை எழுப்புபவர்களை தேச துரோகிகள் என்றும் இராணுவத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் என்றும் பிரதமர் மோடி தொடங்கி அனைத்து சங்பரிவார்களும் கூறி வருகின்றனர். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி ‘‘ரபேல் விமானம் மட்டும் நம்மிடம் இருந்திருந்தால் நடந்திருப்பதே வேறு’’ என்ற ரீதியில் ஆவேசமாக உரையாற்றினார். ரஃபேல் விமானத்தை வாங்குவதில் எதிர்க்கட்சியினர்தான் தேவையற்ற தடைகளை போட்டு காலதாமதத்தை ஏற்படுத்துகின்றனர் என்ற கருத்தை பரப்ப முனைந்தார் பிரதமர். ஆனால் புல்வாமா தாக்குதல் காரணமாக பின்னுக்குத் தள்ளப்பட்டு இருந்த ரஃபேல் விவகாரத்தை இதன் மூலம் தன்னையும் அறியாமல் மீண்டும் முன்னுக்கு கொண்டு வந்தார் மோடி. … <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.