விண்ணில் பரந்த உலகின் சிறிய செயற்கைக்கோள்: வரலாறு படைத்த ரிபாத்

0

தமிழக மாணவர் ரிபாத் ஷாரூக் வடிவமைத்த வெறும் 64 கிராம் எடை உள்ள உலகின் மிகச் சிறிய செயற்கைக்கோளான கலாம்சாட் செயற்க்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது அமெரிக்காவின் நாஸா.

இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது மூலம் இந்தியா உலகளவில் சாதனை புரிந்துள்ளது. இது குறித்து ரிபாத் ஷாரூக் கருத்து தெரிவிக்கையில், தங்களின் இந்த வெற்றி தனது குழுவினரின் உதவி இல்லாமல் சாத்தியமாகி இருக்காது என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், இது 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் செய்யப்பட்டது என்றும் விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோள் இந்த தொழில்நுட்பம் கொண்டு தயாரிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்றும் நாம் வரலாறு படைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் “உலகின் மிகச்சிறிய சிறிய செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இது எங்கள் குழுவினரின் ஒத்துழைப்பு இல்லாமல் நடைபெற்றிருக்க சாத்தியம் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த செயற்கைக்கோளை தாங்கிச் சென்ற ராக்கட் விண்ணில் பரந்த 125 ஆவது நிமடத்தில் இந்த செயற்கைக்கோள் அதிலிருந்து பிரிந்து சென்றுள்ளது. அதன் தகவல் சேமிப்பு பணி முடிவடைந்ததும் கடலில் வந்து விழும் இந்த செயற்க்கைகோளை நாஸா கைப்பற்றி அது சேமித்த தகவல்களை ரிபாதின் குழுவிடம் ஆராய்சிக்காக அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நானோ கீகர் முல்லர் கருவி பொருத்தப்பட்டு விண்ணில் உள்ள கரிவீச்சு அளவுகள் குறித்த தகவல்களை சேமிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.