விண்ணைத் தொடும் ரஃபேல் ஊழல்!

0

விண்ணைத் தொடும் ரஃபேல் ஊழல்!

இந்திய விமானப்படைக்கு தேவையான ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் பெருமளவில் ஊழல் புரிந்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்க்கும் விதமாக ஆதாரங்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காத மத்திய அரசு பிரச்சனையை திசை திருப்பும் நோக்கிலேயே இதுவரை பேசி வருகிறது. இந்நிலையில் தி இந்து ஆங்கில நாளிதழில் அதன் முன்னாள் முதன்மை ஆசிரியரும் தி இந்து குழுமத்தின் தலைவருமான என். ராம் எழுதிய இரண்டு கட்டுரைகள் ரஃபேல் ஊழல் விவகாரத்தை மீண்டும் முதல் பக்கத்திற்கு கொண்டு வந்துள்ளன.

1986இல் அப்போதைய ராஜீவ்காந்தி அரசாங்கம் ஸ்வீடன் நாட்டிடமிருந்து போஃபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ஊழல் புரிந்ததாக செய்தியை வெளியிட்டதும் பத்திரிகையாளர் ராம்தான். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது.

இந்திய விமானப்படையை மேம்படுத்தும் நோக்கில் புதிய போர் விமானங்களை வாங்க வேண்டும் என்ற விமானப்படையின் கோரிக்கையை ஏற்று 2007இல் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு புதிய விமானங்களை வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. 126 போர் விமானங்களை வாங்குவதற்காக போர் விமான தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ஆறு நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டன. இவற்றில் பிரான்ஸ் நிறுவனமான டஸ்ஸால்ட் ஏவியேஷன் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களின் கூட்டமைப்பான ஈரோஃபைட்டர் டைஃப்பூன் ஆகிய நிறுவனங்கள் இந்திய விமானப்படையின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் அமைந்திருந்தன. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.