விபச்சாரிகளிடம் ராணுவ ரகசியங்களை கொடுத்தாரா வருண் காந்தி?

0

நாட்டின் பாதுகாப்பு குறித்த தகவல்களை பாதுகாப்பு ஒப்பந்தக்காரர் அபிஷேக் வெர்மாவிடம் வருண் காந்தி கொடுத்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அபிஷேக் வெர்மாவின் முன்னாள் தொழில் பங்குதாரரான எட்மொண்ட்ஸ் அல்லன் பிரதமர் அலுவலகத்திற்கு கடந்த செப்டெம்பர் 16 ஆம் தேதி எழுதியுள்ள கடிதத்தில் இதனை குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

தனது கடிதத்தில் அவர், வருண் காந்திக்கு வெளிநாட்டு விபச்சார அழகிகளை கொடுத்து உல்லாசமாக இருக்கச்செய்து பின்னர் அதை வைத்து மிரட்டி நாட்டின் பல பாதுகாப்பு தகவல்களை அபிஷேக் வெர்மா பெற்றார் என்று குறிப்பிட்டுள்ளார்.

நியுயார்க்கை மையாமாக கொண்டு இயங்கும் வழக்கறிஞரான எட்வார்ட்ஸ் அல்லன் கடந்த செப்டெம்பர் 16ல் பிரதமர் அலுவலகத்திற்கு எழுதிய கடிதத்தை ஸ்வராஜ் அபியான் தலைவர்களான பிரஷாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளனர். அல்லன் கடிதத்தில் வருண் காந்தியை, பாராளுமன்ற உறுப்பினர் என்றும் பாதுகாப்பு ஆலோசனை குழுவின் உறுப்பினர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தை வெளியிட்டதும், பிரசாந்த் பூஷன், “இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க வை சேர்த்ந்த அரசியல்வாதிகள் தேசிய பாதுகாப்பிற்கு ஊரு விளைவிக்கும் தகவல்களை வெளியிட்டதில் பங்கு வகிகின்றனர் என்பதை காட்டுகிறது. மேலும் இத்தகைய தகவல்கள் தங்கள் கைவசம் இருந்தும் பா.ஜ.க குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை” என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“அல்லன் கடிதத்தில் 2011 இன் இறுதி வரை அபிஷேக் வெர்மா பாதுகாப்பு குறித்த ரகசியங்களை பெற்றும் அதை பிறருக்கு கொடுத்தும் வந்துள்ளார் என்று தெரிவிக்கின்றன. மேலும் இதில் ச்கோர்பீன் நீர்மூழ்கி கப்பல்களின் தகவல் உட்பட பல ரகசிய தகவல்களை வெளியிட்டதில் ஓய்வு பற்ற பல கடற்படை அதிகாரிகளின் பங்கு குறித்தும் அல்லன் குறிப்பிட்டுள்ளார்.” என்று கூறியுள்ளார். இது குறித்து நீதியான விசாரணை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தன்னை குறித்த இந்த செய்தியை வருண் காந்தி முற்றிலுமாக மறுத்துள்ளார். மேலும் இதில் கூறப்பட்டுள்ள செய்திகளை ஆதாரங்களுடன் நிரூபித்தால் தான் அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகிவிடுவதாக தெரிவித்துள்ளார். மேலும் இதன் மீது தான் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவை பற்றி அறிந்தவர்களுக்கு அந்தக் குழுவில் பாதுகாப்பு குறித்த ரகசியங்கள் எதுவும் பகிரப்படுவதில்லை என்று நன்கு தெரியும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், அபிஷேக் வெர்மா வின் பெற்றோர்கள் ராஜிய சபா எம்.பி.க்கள். நான் அவரை எனது 22  வது வயதில் கடைசியாக சந்தித்தேன்.அப்போது நான் லண்டனில் எனது முதுகலைப் பட்டம் பயின்றும் பொது வாழ்க்கையில் இருந்து மிக தொலைவிலும் இருந்தேன். அதனை அடுத்து அபிஷேக் வெர்மாவை நான் சந்தித்ததே இல்லை. இப்போது இது போன்ற முட்டாள்தனமான குற்றச்சாட்டுகளை கேள்விப்படுகிறேன், ஆனால் அதனை நிரூபிக்க ஒரு சிறிய ஆதாரங்கள் கூட இல்லை. ஒருவரது நற்பெருக்கு களங்கம் விளைவிப்பது மிக எளிது. நான் இதனை மிக கடுமையாக எதிர்கொள்வேன். இதன் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன்.” என்று கூறியுள்ளார்.

Comments are closed.