விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் தம்பதி விமான நிறுவனம் மீது வழக்கு

0

அமெரிக்காவின் சிக்காகோ நகரை சேர்ந்த முஹம்மத் மற்றும் இயாமன் ஷெப்லீ என்ற தம்பதியினர் சிக்காகோவின் ஓ’ஹேர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாஷிங்க்டன் டிசி க்கு செல்ல முற்படுகையில் விமானத்தில் இருந்து விமான ஊழியர்களால் வெளியேற்றப் பட்டனர். இதற்கு காரணம் அவர்கள் தங்கள் குழந்தைக்கு சிறப்பு இருக்கை கேட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் மார்ச் 20 ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை Council on American-Islamic Relations (CAIR) அமைப்பின் உதவியுடன் ஸ்கை வெஸ்ட் விமான நிறுவனத்தின் யுனைட்டட் ஏர்லைன்ஸ் மீது அந்த தம்பதியினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து இந்த தம்பதிகளின் வழக்கறிஞர் கூறுகையில், இந்த நிகழ்வு ஒருதலைபட்சமான விமான ஊழியர்களால் நிகழ்ந்துள்ளதாக அந்த தம்பதியினர் கருதுகின்றனர் என்று கூறியுள்ளார்.

தங்கள் மீது தொடரப்பட்ட இந்த வழக்கு குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்க விரும்பாத ஸ்கை வெஸ்ட் விமான நிறுவன செய்தித் தொடர்பாளர், தங்கள் நிறுவனம் சேவையில் உயர்ந்த தரத்தை கையாளும் ஊழியர்களை பணியமர்த்தியுள்ளது என்றும் தாங்கள் பாகுபாடு காட்டப்படுவதற்கு சிரதளவும் இடம் தாராதவர்கள் என்றும் கூறியுள்ளார். இந்த வழக்கு, சக பயணிகள் எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் தாங்கள் விமானத்தில் பயணம் செய்வதை விட்டு தவிர்க்கப்படலாம் என்று முஸ்லிம்களிடையே தற்போது அதிகரித்து வரும் அச்சம் காரணமாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என் திரு CAIR  அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து CAIR அமைப்பின் முன்னணி வழக்கறிஞர் பில் ராபர்ட்சன் கூறுகையில், “இந்த நிகழ்வுகள் குறித்து நீதிமன்றங்கள் மற்றும் அரசு ஆகியவற்றின் கவனத்தை ஈர்த்து இந்த சம்பவங்களுக்கு விமான நிறுவனங்கள் பொறுப்பேற்க செய்ய இது சரியான நேரம் என்று நாங்கள் நம்புகிறோம். இது தான் இந்த வழக்கின் முக்கிய குறிக்கோள்” என்று கூறியுள்ளார். “இது ஷெப்லீ குடும்பத்தை மட்டும் பாதிக்கும் விஷயமில்லை, அதையும் தாண்டியது. இது நம் ஒட்டுமொத்த சமூகத்தை பாதிக்கக்கூடியது” என்று CAIR அமைப்பின் சிக்காகோ நிர்வாக இயக்குனர் அஹ்மத் ரிஹாப் தெரிவித்துள்ளார்.

Comments are closed.