விமானத்தை கடத்தப் போவதாக 12ஆம் வகுப்பு மாணவன் மிரட்டல்!

0

மத்திய பிரதேசத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் ஏர் இந்தியா விமானத்தை கடத்தப் போவதாக கூறி மிரட்டல்அழிப்பு விடுத்திருந்தார். இது காவல் துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. தீவிர விசாரணைக்கு பிறகு மிரட்டல்அழைப்பு விடுத்தவரை காவல்துறை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் தான் விளையாட்டுக்கே அந்த அழைப்புவிடுத்ததாக கூறியுள்ளார். 12 வகுப்பு மாணவரான அவரை குறித்து கூடுதல் தகவல் எதனையும் காவல் துறை தெரிவிக்கவில்லை.

இது குறித்து சோன்வி துணை கமிஷனர் விலாஸ் சண்தன்ஷிவ் கூறுகையில், மத்திய பிரதேசத்தின் ஹர்தா மாவட்டத்தில் இருந்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை நீதிமன்றம் முன் சமர்ப்பித்துள்ளோம். டிசம்பர் 2 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் அவர் 12 வகுப்பு மாணவர் என்றும் விளையாட்டிற்காகவே இந்த மிரட்டல் அழைப்பை விடுத்தார்என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருந்தும் தீவிரவாத தடுப்பு படை மற்றும் உளவுத்துறை இந்த வழக்கு விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து ஏர் இந்தியா விமானம் அளித்த புகாரில், நவம்பர் 20 ஆம் தேதி ஏர் இந்தியாவின் இலவச தொலைப்பேசி எண்ணுக்கு இரவு 10:25 மணியளவில் அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து அழைப்பு வந்ததாகவும், நவம்பர் 28 ஆம்தேதி விமானத்தை அவர் கடத்தப் போவதாகவும் மிரட்டல் விடுத்தார். அழைப்பில் பேசியவர் ஹிந்தி சரளமாகபேசியதாகவும் அவர் தன்னை ஒரு ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர் என்றும் கூறியுள்ளார் .

புகார் கிடைத்ததும் போலீசார் அந்த அழைப்பை குறித்து விசாரணை செய்ததில் இந்த மாணவர் போலீசார் சிக்கினார்.அவரிடம் இருந்து மூன்று சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டன. அவர் அழைப்பு விடுக்கப் பயன்படுத்திய சிம் கார்டை அவர் கீழே இருந்து எடுத்ததாக கூறியுள்ளார்.

Comments are closed.