வியாபம் ஊழல் தொடர்பான மற்றொரு மரணம்: மர்ம விபத்தில் சிக்கிய IB அதிகாரி

0

இந்திய உளவுத்துறையின் மூத்த அதிகாரி, அஜெய் குமார் அடையாளம் தெரியாத மர்ம வாகனத்தால் ஞாயிறு இரவு இடித்துக் கொல்லப்பட்டார். இவர் வியாபம் ஊழல் வழக்கு தொடர்பான உயர் கட்ட விசாரணை ஒன்றை நடத்தி வந்தவர் என்பதும் இந்த வழக்கு தொடர்பாக பா.ஜ.க அரசுக்கு நெருக்கடி கொடுக்கக் கூடிய முக்கிய ஆதாரங்களை சேகரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அஜெய் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது அதி வேகத்தில் வந்த ஒரு கருப்பு நிற கார் ஒன்று அவரை இடித்துத் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. சாலையில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அஜெய் குமார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என்று கூறியுள்ளனர்.

விபத்தை ஏற்படுத்தியவர்கள் மீது பொதுமக்கள் வழக்கு எடுக்கக்கோரி பல மனிநேரமாக கேட்டுக்கொண்ட பிறகே காவல்துறையினர் வழக்கு பதிந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து ஒரு காவல்துறை அதிகாரி கூறுகையில், நாங்கள் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றோம் என்றும் இது விபத்த கொலையா என்பது பற்றியும் அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த வியாபம் ஊழல் வழக்கு தொடர்பாக மத்திய பிரதேச ஆளுநரின் மகன் உட்பட இதுவரை 50 க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

தற்பொழுது உயிரிழந்துள்ள அஜெய் குமார் இன்னும் இரண்டு வருடங்களில் ஓய்வு பெறக் கூடியவர். இவருக்கு இந்திய காவல்துறை பதக்கம் வழங்கப்பட இருந்தது.

Comments are closed.