விளைநிலங்களில் உயர் அழுத்த மின்கோபுரங்கள்!

0

‘என் வாழ்க்கைச் சாதனங்களை நீ பறித்துக் கொள்ளும்போது என் உயிரையே பறித்தவனாகிறாய்’

– கவிஞர் பியரியின் புகழ்பெற்ற கவிதை இது.

விவசாயிகளின் வாழ்க்கையாகவும் உயிராகவும் இருப்பது அவர்களுடைய நிலம்தான். நிலங்களை விவசாயிகள் இழக்க நேரிடுவது அவர்களின் உயிரைப் பறிப்பதற்கு சமமாகும். அதனால்தான் விவசாய நிலங்களின் வழியாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு திட்டத்தையும் அவர்கள் அனுமதிப்பதில்லை. அதை எதிர்த்து போராடுகிறார்கள்.

1947 ஆம் ஆண்டிலிருந்து 2004 வரை 6 கோடி மக்கள் தங்கள் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதால் வேறு வழியின்றி இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களிடமிருந்து 6.25 கோடி ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கக்கூடிய திட்டங்கள் ஏமாற்றத்தையே தருகின்றன. பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மாத்திரமே மறுவாழ்வு திட்டத்தின்மூலம் பயனடைந்துள்ளனர் என்கிறது ஓர் ஆய்வு. தேசத்தின் நலனிற்காக, வளர்ச்சிக்காக என்று பிடுங்கப்படும் நிலங்களினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் சிதறடிக்கப்படுகிறது. அதனால்தான் அரசுகளின் பொறுப்பற்ற பல திட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இன்று தெருவில் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் தற்போது விவசாயிகளின் நிலங்களில் அமைக்கப்பட்டுவரும் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து 13 மாவட்ட விவசாயிகள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து ஆந்திரம் வழியாக திருப்பூருக்கு மின்சாரம் கொண்டு வந்து தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதுதான் திட்டம். 800 கி.மீ. தூரத்திற்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் இந்திய பவர்கிரிட் நிறுவனம் மற்றும் தமிழக அரசின் மின் தொடரமைப்பு கழகம் இணைந்து மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகளை செய்து வருகின்றன.

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய 13 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் நிலங்களின் வழியாக இந்த திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கான ஒப்புதலை மத்திய மின்சார வாரியமும், தமிழக அரசும் 2015ம் ஆண்டு அளித்தன. தமிழ்நாட்டில் மட்டும் 30ற்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இத்திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. 2,024 கி.மீ. அளவிற்கு பாதைகள் போடப்படுகின்றன.

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.