விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தற்கொலை விவகாரம்! – விமன் இந்தியா இயக்கம் மனு!

0

விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தற்கொலை விவகாரம்!
உள்துறைச் செயலாளர், முதலமைச்சர் தனிப்பிரிவில் விமன் இந்தியா இயக்கம் மனு!

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே பங்காரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான எஸ்.வி.எஸ். சித்த மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகிய 3 பேரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கல்லூரியில் அதிககட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், போதிய அடிப்படை வசதிகளோ, போதுமான பேராசிரியர்களோ இல்லை என கூறி கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவிகள் கடந்த 5 மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து மாணவிகளின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுவந்துள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.மாவட்ட நிர்வாகமும் இதனை கண்டு கொள்ளவில்லை.

இதனுடைய தொடர்ச்சியாகத்தான் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த தற்கொலைக்கான காரணத்தையும்,பின்னணியையும் கண்டறிய வேண்டும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட எஸ்.வி.எஸ். சித்த மருத்துவ கல்லூரி அனுமதியின்றி இயங்கிவந்ததாக டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

இந்த கல்லூரி அனுமதியின்றி செயல்பட அனுமதியளித்த அதிகாரிகள் யார்? ஏன் இதனை அரசு கண்டுகொள்ளமல் இருந்தது? அனுமதி இன்றி கல்லூரி செயல்பட அரசு எவ்வாறு அனுமதித்தது? இந்த கேள்விகளுக்கு தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். இது போன்று தழிழகத்தில் எத்தனை கல்வி நிறுவனங்கள் இயங்குகிறது என்பதை உடனடியாக அரசு கண்டறிவதோடு இது குறித்து தகுந்த நடவடிக்கையும் மேற்கொண்டிட வேண்டும்.இந்நிகழ்வின் போது WOMEN INDIA MOVMENT – ன் தேசிய செயலாளர் சாஹிரா பானு மற்றும் சென்னை மாவட்ட WIM நிர்வாகிகள், அக்தரி பேகம், சல்மா, ஹம்சத் பானு, பொற்கொடி, ராணி ஆகியோர்உடனிருந்தனர்.

Comments are closed.