விவசாயிகளை கொல்லும் பா.ஜ.க அரசு

0

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பத்ககோன் பகுதியில் உள்ள விவசாயிகள் தேசிய அனல் மின் நிறுவனத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இப்பகுதி விவசாயிகளின் பயிர் நிலங்கள் தேசிய அனல்மின் நிறுவனத்தால் கையகப்படுத்தப்படுவதில் இருந்து தடுக்க கடந்த 2004 இல் இருந்து போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தில் தற்போது சிறு பர்வாத் கிராமத்தின் அருகே உள்ள ஒரு சுரங்கத்தில் இரண்டு வாரமான  உள்ளிருப்பு போராட்டத்தையும் அவர்கள் நடத்தினர்.

இந்த போராட்டத்தை கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் காவல் துறையினர் கலைக்க முயன்றனர். இந்த போராட்டத்தில் விவசாயிகளுடன் கலந்து கொண்ட அப்பகுதி எம்.எல்/ஏ வான நிர்மலா தேவியை கைது செய்ய காலவ்துரையினர் முயல அவர்களை விவாசயிகள் தடுத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது 60 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் பலருக்கு படுகாயம் ஏற்ப்பட்டுள்ளது. நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும் 40 பேருக்கு மேல் படுகாயமுற்றிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2013 இல் இருந்து இப்பகுதியில் விவசாயிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்துவது இது மூன்றாவது முறை என்று கூறப்படுகிறது.

பத்ககோன் பகுதியை சேர்ந்த குமார் திவாகர் என்பவர், “எங்களை ஏன் அதிகாரிகள் சுட்டனர் என்று நாங்கள் ராகுவர் தாசிடம் கேட்க வேண்டும். எங்களை அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராக சுடும் சூழலில் நாங்கள் ஏன் வாழ வேண்டும்? அவர்கள் எங்கள் அனைவரையும் சுட்டுக்கொல்ல நாங்கள் வரிசையில் செல்ல வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த அத்துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட 16 வயது மாணவரான பவன் குமாரின் குடும்பம், காவல்துறையால் சுடப்பட்டு கிடந்த பவன் குமாரை காவல்துறையினர் கடுமையாக தாக்கினர் என்று கூறியுள்ளனர். “பவன் குமாரை சுட்ட பிறகு காவல்துறையினர் அவனது உடலை பஞ்சாயத் அலுவலகத்திற்குள் இழுத்துச் சென்று அங்கு ஒரு வாகனத்தில் வைத்திருந்தனர்.” என்று பவன் குமாரின் தந்தை மகி ராம் கூறியுள்ளார். அப்போது பவன் குமார் உயிரோடு தான் இருந்தார் என்றும் அவரை மருத்துவமனை எடுத்துச் செல்லாமல் காவல்துறையினர் அவரை தாக்கினர் என்று கூறியுள்ளார். பவன் குமாரின் கதறலை கிராம மக்கள் பல மணி நேரமாக கேட்டுள்ளனர். இறுதியில் அவர் உயிரிழந்துவிட்டார் என்று பவன் குமாரின் தந்தை கூறியுள்ளார்.

மேலும் இந்த துப்பாக்கிச்சூடில் உயிரிழந்த மற்றவர்களின் குடும்பத்தினர், காவல்துறை தங்களை மிரட்டியாதாக தெரிவித்துள்ளனர். இந்த ஒட்டுமொத்த பகுதியே ஒரு இராணுவ முகாம் போல காட்சியளித்தது என்று சந்தோஷ் ராய் என்பவர் கூறியுள்ளார் இவரது 18 வயது மருமகன் அபிஷேக் ராய்யும் இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். அவரது உடலை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு பெற்றதாக சந்தோஷ் ராய் கூறியுள்ளார்.

பிரேத பரிசோதனை மையத்தில் வைத்து காவல்துறையினர், “உங்களது பாடங்களை கற்றுக்கொள்ளுங்கள். சுரங்க வேலைகளை நடக்க விடுங்கள் இல்லையென்றால் இன்னும் அதிகாமா பிணங்கள் விழும்” என்று கூறியதாக சந்தோஷ் ராய் தெரிவித்துள்ளார்.

இதே போன்று சிந்த்வார் கிராமத்திலும் மக்கள் NTPC மீதான தங்களது கோபத்தினை வெளிப்படுத்து வருகின்றனர். NTPC விவசாயிகளிடம் நேரடியாக பேச விரும்பவில்லை என்றும் அவர்கள் நிலா தரகர்களிடம் தன பேசுகின்றனர் என்றும் அப்பகுதியின் சுதேஷ்வர் வெர்மா கூறியுள்ளார். NTPC இப்பகுதியில் அலுவலகம் ஒன்றை வைத்துள்ளது. ஆனால் அங்கு சென்றால் தங்களிடம் பேச கூட அவர்கள் மறுக்கின்றனர் என்று வெர்மா கூறியுள்ளார்.

மேலும் இந்த நிகழ்வை அடுத்து வெளியான ஊடக செய்திகள் விவசாயிகளை கிளர்ச்சியாளர்கள் என்று குறிப்பிட்டுள்ளன. மேலும் யோகேந்திர சாவ்வின் புலி நக்சல் படை காவல்துறையினரை தாக்கியதாக கூறியுள்ளனர். நாங்கள் வெறும் விவசாயிகள், நக்சல் படையினரோ அலல்து வேறு குழுவை சேர்ந்தவர்களோ அல்ல என்று கூறியுள்ளார்.

விவசாயிகள் மீதான பா.ஜ.க அரசின் இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்மியுனிஸ்ட் கட்சியின் தலைவர் பிரிந்தா காரத் “பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். அரசு ஜார்கந்தில் உள்ள விவசாயிகள் மீது ‘Surgical Strike’ நடத்தி வருகிறது. இது தான் பா.ஜ.க.வின் தேசியவாதமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments are closed.