வீடில்லாதவர்களின் பெருநாள்! ரோஹிங்கியாக்களின் கசப்பும் இனிப்பும் கலந்த ரமலான்!

0

வீடில்லாதவர்களின் பெருநாள்! ரோஹிங்கியாக்களின் கசப்பும் இனிப்பும் கலந்த ரமலான்!

‘மியான்மரைப் போல இங்கு நோன்பு நோற்பது எளிதல்ல. கடுமையான சூடு நிலவுகிறது. இங்கு மரங்களில்லை. கூரையாக தார்ப்பாய் வேய்ந்திருப்பதால் வெப்பம் அதிகமாக உள்ளது. அது சூரிய ஒளியின் தாக்கத்திற்கேற்றவாறு வெப்பத்தை உள்வாங்கக் கூடியது. ஆகையால் இங்கு நோன்பு நோற்பது சிரமமாகத்தான் உள்ளது.”

மியான்மர் அரசின் ஆதரவோடு புத்த தீவிரவாதிகள் மற்றும் இராணுவத்தின் இன அழித்தொழிப்பு நடவடிக்கையிலிருந்து தப்பித்து வட இந்தியாவில் அகதியாக புலன்பெயர்ந்துள்ள ஹாஷிமின் வார்த்தைகள் இவை. எனினும் எந்த நேரத்திலும் தாக்கப்படுவோம் என்ற பயமின்றி நோன்பு நோற்கலாம் என்ற ஆறுதல் இந்த முகவரியை இழந்தவர்களிடம் காணப்படுகிறது.

வட இந்தியாவில் 40 முதல் 50 செல்சியஸ் வரையிலான வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் தார்ப்பாய் மற்றும் பலவீன கூரைகளால் வேயப்பட்ட கூடாரங்களில் பிறரின் தயவால் தங்கியிருக்கும் குழந்தைகளும் வயோதிகர்களுமடங்கிய ரோஹிங்கியாக்கள் நோன்பை கடைப்பிடித்தனர். கடுமையான சூட்டால் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டால் சுத்தமான குடிநீர் கிடைப்பது பெரும்பாடாக உள்ளது. இது நாட்டின் பெரும்பாலான அகதி முகாம்களில் தங்கியிருப்போர் சந்திக்கும் முக்கிய பிரச்சனை.

மியான்மரில் அமைதியான காலங்களில் கூட மாலை நேரங்களில் ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததை நினைவுகூரும் ரோஹிங்கியாக்கள், இங்குள்ள சூழலில் சற்று நிம்மதியை உணர்கின்றனர். பல அகதி முகாம்களில் தங்கியிருக்கும் ரோஹிங்கியாக்கள், இருக்கின்ற ரொட்டித்துண்டுகளை பகிர்ந்துண்டு வாழ்ந்தாலும் பலருடைய நோன்பு ஒரே நேரத்தில் மகிழ்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாகவே இருந்தது. பலருடைய முகத்திலும் கவலையின் ரேகைகள் படர்ந்திருப்பதை காணமுடிகிறது. வழக்கமாக ரமலானில் இவர்கள் குடும்பத்தினரோடும் சமூகத்தோடும் கூடி வாழ்வார்கள். கடந்த சில மாதங்களாக இவர்களில் பலர் தங்களுடைய உறவினர்களை இழந்துள்ளனர். ஐக்கிய நாடுகள் அவையின் புள்ளிவிபரப்படி 2017 இறுதியில்தான் இராணுவ நடவடிக்கைகளில் ரோஹிங்கியாக்கள் அதிகமாக கொல்லப்பட்டுள்ளனர். இக்காலக்கட்டத்தில் மட்டும் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

நமது வாழ்க்கை சூழல்களில் எவ்வாறு இறைவனுக்கு நன்றியை அர்ப்பணிக்கவேண்டும்; எவ்வாறு பொறுமையை கடைப்பிடிக்கவேண்டும் என்பதை ரமலான் மாதம் கற்றுத்தருவதாக பஷீர் அஹ்மது என்ற ரோஹிங்கியா அகதி கூறுகிறார். பிளாஸ்டிக் பைகள் மற்றும் மூங்கில்களால் கட்டப்பட்ட குறுகிய கூடாரங்களில் வாழும் பஷீர் அஹ்மதை போன்ற ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும் நம்பிக்கையான வார்த்தைகளே அவர்களுடைய பலம் எனலாம். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.