வீட்டில் குண்டு வெடித்து பா.ஜ.க தொண்டர் மரணம்

0

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தின் கொட்டயம்போயில் பகுதியில் பா.ஜ.க வை சேர்ந்த திக்ஷித் என்பவர் வசித்து வந்தார்.

கடந்த சனிக்கிழமை இவரது வீட்டில் குண்டு வெடித்து இவர் உயிரிழந்துள்ளார். பா.ஜ.க தொண்டரின் வீட்டில் வெடித்த இந்த குண்டு, வெடிகுண்டு தயாரிப்பின் போது வெடித்திருக்கலாம் என்று காவல்துறை சந்தேகித்துள்ளது. இந்த கோணத்திலும் விசாரணை துவங்கப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது திக்ஷித் தன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். குண்டு வெடிப்பில் அவரது வீடும் சேதமடைந்துள்ளது. இவரது உடல் தலசேரியில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

Comments are closed.