வெடிக்குண்டு தயாரித்தபோது இந்துத்துவா தீவிரவாதி பலி: யு.ஏ.பி.ஏ சட்டத்தின் கீழ் வழக்கை பதிவுச் செய்யாத இடதுசாரி அரசு!

0

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள கூத்தப்பரம்பு பகுதியில் கடந்த 21-ஆம் தேதி பா.ஜ.கவைச் சார்ந்த தீட்சித் என்பவர் வெடிக்குண்டை தயாரித்தபோது குண்டுவெடித்து பலியானார்.இவரது வீட்டில் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.எனினும் இவ்வழக்கில் இதுவரை யு.ஏ.பி.ஏ சட்டம் பிரயோகிக்கப்படவில்லை.யு.ஏ.பி.ஏ சட்டத்தின் கீழ் வழக்கை பதிவுச் செய்வதற்கான அனைத்து முகாந்திரங்களும் உள்ள நிலையில் இச்சம்பவத்தில் போலீஸ் மவுனம் சாதிப்பது சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

வெடிக்குண்டு தயாரித்தபோது நிகழ்ந்த மரணம் என்பது உறுதியான பிறகும் அசாதாரண மரணம் என்று போலீஸ் வழக்கு பதிவுச் செய்துள்ளது.வெடிக்குண்டுகளை தயாரித்தது மற்றும் பயங்கர ஆயுதங்களை பதுக்கி வைத்த சம்பவத்தில் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் உள்ளிட்டவர்களுக்கு தொடர்பு இருப்பது ஆரம்ப கட்ட விசாரணையில் போலீசுக்கு தெரியவந்தது.

ரகசியமாக நடந்த வெடிக்குண்டு தயாரிப்பையும், மரணத்தையும் யு.ஏ.பி.ஏ சட்டத்தின் கீழ் கொண்டுவர போலீஸ் தயாராகவில்லை.கேரளாவில் பல சம்பவங்களிலும் சாதாரண குற்றச்சாட்டுக்களின் பெயரால் யு.ஏ.பி.ஏ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டு பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவ்வழக்குகளை தேசிய புலனாய்வு குழு(என்.ஐ.ஏ) விசாரித்தது. இந்நிலையில் கேரளாவில் இடதுசாரிகள் தலைமையிலான அரசின் உள்துறை அமைச்சகம் பா.ஜ.கவினர் குற்றவாளிகளானபோது யு.ஏ.பி.ஏவை சுமத்தாமல் நழுவுகிறது.

Comments are closed.