வெறுப்பு அரசியல் மூலம் மோடி பெற்ற வெற்றி உலகிற்கே கெட்ட செய்தி: பிரபல பத்திரிகைகள் கடும் விமர்சனம்

0

தனிப் பெரும்பான்மையுடன் மோடி மீண்டும் பிரதமராவது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே கெட்ட செய்தி என்று இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் பிரபல பத்திரிகை கார்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொய் பிரச்சாரம் மற்றும் வெறுப்பு அரசியல் மூலம் இந்தியாவை மோடி மயக்கிவிட்டதாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையும் விமர்சித்துள்ளது. இந்திய தேர்தல் முடிவுகள் பற்றி கார்டியன் பத்திரிகை வெளியிட்டுள்ள தலையங்கத்தில் மிகப்பெரிய தேர்தலில் நரேந்திர மோடி என்ற தனி மனிதர் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் இந்திய பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்த போதும் அவர் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பதாக தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கே மோசமான செய்தி என்று கார்டியன் பத்திரிகை எச்சரித்துள்ளது. இந்து தேசியவாதம் என்ற பெயரில் நாட்டை மோசமான பாதைக்கு அழைத்து செல்லும் இயக்கத்தின் அரசியல் பிரிவே பாரதிய ஜனதா கட்சி என்று கார்டியன் விமர்சித்துள்ளது.

இந்து உயர்சாதியினர் ஆதிக்கம், பெரிய தொழிலாளிகளிக்கு ஆதரவு, வெறுப்பு அரசியல், மாநில அரசு அதிகாரங்களை கட்டுப்படுத்துதல் போன்றவை பாரதிய ஜனதாவின் நிலைப்பாடு என்றும் கார்டியன் எச்சரித்துள்ளது. மோடியின் பெருவாரியான வெற்றியின் மூலம் சுமார் 20 கோடி இஸ்லாமியர்களை இரண்டாம் தரகுடிமக்களாக கருதும் இருண்ட அரசியலிடம் இந்தியாவின் ஆன்மா தோற்றுவிட்டதாக அந்த பத்திரிகை கூறியுள்ளது.

மோடி சிறந்த பிரச்சாகர் என்பதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ள கார்டியன், பொய் தகவல்கள் மற்றும் பிரிவினை வாதத்தை வைத்து மோடி பிரச்சாரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது. இதே போல் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையும் மோடியின் வெற்றியை கடுமையாக விமர்சித்துள்ளது.

பொய் பிரச்சாரம் மற்றும் வெறுப்பு அரசியல் மூலம் இந்தியாவை மோடி மயக்கிவிட்டார் என்று நியூயார்க் டைம்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. தி கார்டியன் மற்றும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையும் விமர்சித்துள்ளது.

Comments are closed.