வெறுப்பை உமிழும் சங்பரிவார தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாப்புலர் ஃப்ரண்ட் வலியுத்தல்!

0

புதுடெல்லி: ஆக்ராவில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் முஸ்லிம்களை தாக்க வேண்டும் என்று பகிரங்க அழைப்பு விடுத்த மத்திய அமைச்சர் கதேரியா உள்ளிட்ட மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் K.M. ஷெரிப் அவர்கள் வலியுறுத்தினார். இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சங்பரிவார தலைவர்கள் ஹிந்துக்கள் தங்களது பலத்தை திரட்ட வேண்டும் என்றும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இறுதி யுத்தத்திற்கு தயாராக வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதுபோன்ற வெறுப்பு பேச்சுக்கள் மூலம் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே அச்ச உணர்வை உருவாக்கி மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து குறிப்பாக எதிர்வரும் உ.பி சட்டமன்ற தேர்தலில் இலாபம் அடையும் நோக்கிலே பகிரங்கமாக பேசப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்பு இதுபோன்ற வகுப்புவாதத்தை முன் வைத்து இலாபம் பெரும் யுக்தியை பயன்படுத்தி 2013-ம் ஆண்டு முஸாஃபர் நகரில் அப்பாவி மக்களை கொன்று குவித்ததோடு, ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகள் முகாம்களில் இன்று வரையிலும் தஞ்சமடைந்துள்ளனர். இதுபோன்ற சங்பரிவாரத்தின் வெறுக்கத்தக்க முயற்சியினை விழிப்புடன் எதிர்கொண்டு நல்லிணக்கத்தை பேண வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் இரங்கல் கூட்டத்தில் உரையாற்றிய அனைவரின் அரசாங்க பதவிகளை பறிப்பதோடு சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையை தூண்டியதற்காக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கே.எம். ஷெரிப் வலியுறுத்தினார்.

Comments are closed.