வெற்றி நடை போடும் பெட்ரோல், டீசல் விலை!

0

வெற்றி நடை போடும் பெட்ரோல், டீசல் விலை!

தங்கள் ஆட்சியின் நான்காண்டு ‘சாதனை’களை பத்திரிகைகளுக்கு பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்தவர்கள் சொல்ல மறந்த ‘சாதனை’க் கதை ஒன்று உண்டு. அதுதான் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த கதை. பெட்ரோல் விலை லிட்டர் 80 ரூபாயைத் தாண்டி ‘வெற்றிநடை’ப் போட்டுக் கொண்டிருக்கிறது. கூடவே டீசல் விலையும் எகிறியிருக்கிறது. பெட்ரோல், டீசல் பொருட்களின் விலையேற்றம், அனைத்துப் பொருட்களின் விலையையும் உச்சத்தை நோக்கி நகர்த்தியிருக்கிறது. கவலைப்பட ஆட்சியாளர்கள் தயாராக இல்லை.

‘சர்வதேச சந்தையில் கச்சா விலை உயர்வின் அடிப்படையில்தான் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அப்படியிருக்கையில், பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் மத்திய அரசு என்ன செய்யும்?’ எனக் கேள்வி எழுப்பும் பிரகஸ்பதிகள் யார் என்று பார்த்தால் ஒன்று, அவர் விவரம் தெரியாதவராக இருக்க வேண்டும் அல்லது பா.ஜ.க. ஆதரவாளராக இருக்க வேண்டும். விலை உயர்வுக்கான காரணம் குறித்து கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை மாதத்துக்கு இரண்டு முறை நிர்ணயித்து வந்தன. இதை மாற்றி, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து தினந்தோறும் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. பைசா கணக்கில் அதிகரித்துக் கொண்டே வந்த பெட்ரோல், டீசலின் விலை, இப்போது லிட்டருக்கு 100 ரூபாயை நோக்கி வேகமாகச் செல்கிறது. கடந்த 2013 செப்டம்பர் 14ஆம் தேதி பெட்ரோல் விலை ரூ.79.55 ஆக இருந்தது. இதுவே வரலாறு காணாத உயர்வாக இருந்தது. காங்கிரஸ் கூட்டணி அரசின் அந்த சாதனையை பா.ஜ.க. அரசு தகர்த்துவிட்டது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.