வெல்லும் ஃபலஸ்தீனம்

0

வெல்லும் ஃபலஸ்தீனம்

ஃபலஸ்தீனில் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சமீப ஆண்டுகளில் இத்தகைய மக்கள் எழுச்சியை இஸ்ரேல் கண்டதும் இல்லை, இதை எதிர்பார்க்கவும் இல்லை. ஃபலஸ்தீனியர்களின் நிலங்களை அக்கிரமமாக ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட இஸ்ரேல் தொடர்ந்து ஃபலஸ்தீனியர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதை தனது வாடிக்கையாகவே வைத்துள்ளது. இதன் ஓர் அங்கமாக கலீலியில் உள்ள ஃபலஸ்தீனியர்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிக்கும் வேலைகளில் இஸ்ரேல் இறங்கியது. இஸ்ரேலின் இப்போக்கை கண்டித்து மார்ச் 30, 1976ல் ஃபலஸ்தீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஃபலஸ்தீனியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இஸ்ரேல் ஆறு பேரை சுட்டுக் கொன்றது. இதனை நினைவு கூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30ஆம் தேதியை ஃபலஸ்தீனியர்கள் நில மீட்பு நாளாக (லேண்ட் டே) கடைப்பிடித்து வருகின்றனர்.

ஏறத்தாழ 500 கிராமங்களை சேர்ந்த ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஃபலஸ்தீனியர்களை துரத்தியடித்து, ஒரு இனப்படுகொலையை நிகழ்த்தி மே 15, 1948ல் இஸ்ரேல் என்ற தேசம் அடாவடியாக உலக வரைபடத்தில் திணிக்கப்பட்டது. ஃபலஸ்தீனியர்கள் இத்தினத்தை நக்பா (மிகப்பெரும் பேரழிவு) என்று அழைக்கின்றனர். நவம்பர் 29, 1947ல் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 181ன் கீழ் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. ஆனால் தனக்கு கொடுக்கப்பட்டதை விட அதிகமாகவே எடுத்துக் கொண்டது இஸ்ரேல்.

இனப்படுகொலை என்பது வெறும் கொலைகளுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. ஒரு பகுதியில் உள்ள மக்களை அங்கிருந்து முற்றிலுமாக அப்புறப்படுத்தி, அவர்களின் கலாசாரத்தை அங்கிருந்தும் மறைத்து, இவர்கள் விரட்டப்பட்ட இடங்களில் வேறு நபர்களை குடியமர்த்துவது இனப்படுகொலையின் முழுமையான வடிவம். மக்களை கொலை செய்வதை விட அவர்களை அவர்களின் இடங்களை விட்டும் கூட்டம் கூட்டமாக அப்புறப்படுத்து வதைதான் இனப்படுகொலையை நிகழ்த்துபவர்கள் விரும்புகின்றனர். ஃபலஸ்தீனிலும் அதுதான் நடந்தது. இன்றும் தொடர்கிறது.

ஃபஸ்தீனில் யூதர்களுக்கான தேசத்தை உருவாக்க வேண்டுமென்றால் அங்குள்ள மக்களை விரட்டியடிக்க வேண்டும் என்பதில் ‘சியோனிசத்தின் தந்தை’ என்றழைக்கப்படும் தியோடர் ஹெசில் கவனமாகவே இருந்துள்ளார். ஜூன் 12, 1895ல் அவருடைய டைரி குறிப்பில் இதனை குறிப்பிட்டும் உள்ளார். ‘அரபிகளை அவர்களின் நிலங்களில் இருந்தும் அப்புறப்படுத்தி அவற்றை நாம் அபகரிக்க வேண்டும்’ என்று அக்டோபர் 5, 1937ல் தனது மகனுக்கு எழுதிய கடிதத்தில் டேவிட் பென் குரியன் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இவர்தான் பின்னைய நாட்களில் இஸ்ரேலின் முதல் பிரதமராக பதவி வகித்தார். ஆக, ஃபலஸ்தீனியர்கள் அவர்களின் நிலங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டது ஒன்றும் தற்செயல் நிகழ்வல்ல. விரட்டப்பட்ட ஃபலஸ்தீனியர்கள் வாழ்ந்த இடங்களில் ஐரோப்பாவில் இருந்து கொண்டு வரப்பட்ட யூதர்கள் குடியமர்த்தப் பட்டனர். இதற்கு இங்கிலாந்தும் அமெரிக்காவும் முழு அளவில் உதவிகள் செய்தன. ஃபலஸ்தீனியர்கள் வாழ்ந்த இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு அவற்றிற்கு ஹீப்ரு மொழியில் பெயர்கள் சூட்டப்பட்டன.

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்


Comments are closed.