வெள்ள நிவாரண பணிகளுக்கு தயாராகுங்கள்! – பாப்புலர் ஃப்ரண்ட் தொண்டர்களுக்கு அழைப்பு!

0

பத்திரிக்கை செய்தி

வெள்ள நிவாரண பணிகளுக்கு தயாராகுங்கள்! – பாப்புலர் ஃப்ரண்ட் தொண்டர்களுக்கு அழைப்பு!

எதிர்பாராத இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போதும், பேரிடர்களின் போதும் மக்களின் துயர் துடைக்கும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் தொடர்ந்து களப்பணியாற்றி
வருகின்றது. தமிழகத்தை சூறையாடிய ஆழிப் பேரலை, சென்னை வெள்ளப் பெருக்கு, கடந்த வருடம் ஏற்பட்ட வர்தா புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் போது பாப்புலர் ஃப்ரண்ட் மேற்கொண்ட மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மகத்தானது. யாராலும் மறக்க முடியாதது. இயற்கை சீற்றங்களால் தமிழக மக்கள் பாதிப்புக்குள்ளான போது பாப்புலர் ஃப்ரண்டின் செயல் வீரர்கள் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தொடர்ந்து தங்களை ஈடுபடுத்தி வந்துள்ளதுனர்.

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகின்றது. நீர்நிலைகளும் வேகமாக நிறைந்து வருகின்றது. இந்த சூழ்நிலையில் வெள்ள பாதிப்பிலிருந்து மக்களை மீட்கும் முகமாகவும், தேவையான நிவாரண பணிகளை மேற்கொள்ளும் முகமாகவும் அனைத்து செயல் வீரர்களும் நிவாரண பணி செய்ய தயாராக வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டு பணிகளை துரிதப்படுத்த பாப்புலர் ஃப்ரண்ட் தீர்மானித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் எந்நேரமும் பாப்புலர் ஃப்ரண்ட்டின் மாநில மற்றும் மாவட்ட அலுவலகங்கள் மற்றும் நிவாரண மையங்களை தொடர்பு கொள்ளலாம் என கேட்டுக்கொள்கின்றேன்.

இப்படிக்கு

A.ஹாலித் முஹம்மது,
மாநில பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

Comments are closed.