வேலூர் சிப்பாய் புரட்சி: பாப்புலர் ஃப்ரண்ட் வெளியிட்ட ஆவணப்படம்

0

வேலூர் சிப்பாய் புரட்சி: பாப்புலர் ஃப்ரண்ட் வெளியிட்ட ஆவணப்படம்

நவம்பர் 10 -திப்பு ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கி.பி 1806 வேலூர் சிப்பாய் புரட்சி ஆவணப்படம் வெளியீட்டு நிகழ்ச்சி அன்று மாலை 06.30 மணியளவில் சென்னை பெரியமேட்டில் அமைந்துள்ள பாப்புலர் ஃப்ரண்ட் தென் சென்னை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் எம்.முஹம்மது சேக் அன்சாரி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அ.முஹம்மது ஃபயாஸ் வரவேற்புரையாற்றினார். மாநில செயலாளர் எம். நாகூர் மீரான் முன்னிலை வகித்தார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எம்.முஹம்மது இஸ்மாயில், கி.பி 1806 -வேலூர் சிப்பாய் புரட்சி ஆவணப்படத்தை வெளியிட தமிழக அரசு அருங்காட்சியகத்துறை முன்னாள் துணை இயக்குனரும், இஸ்லாமிய பண்பாட்டு ஆய்வு மையம் இயக்குனருமான முனைவர் ஜெ. ராஜா முஹமது பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகியும், தொழில் அதிபருமான எம்.முஹம்மது முஸ்தபா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் துணைப்பொதுச்செயலாளரும், ‘தீக்கதிர்’ முன்னாள் பொறுப்பாசிரியருமான அ. குமரேசன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பி.அப்துல் ஹமீது, புதிய விடியல் இணை ஆசிரியர் பி.ரியாஸ் அஹமது ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியை வட சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் ராஜா தொகுத்து வழங்கினார். இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தென் சென்னை மாவட்ட தலைவர் ஜெ. முஹம்மது நாஜிம் நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள், கல்வியாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், சமுதாய தலைவர்கள், பத்திரிகையாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

வரலாற்றை சொல்லிக் கொடுக்க வேண்டும்!

வேலூர் சிப்பாய் புரட்சி ஆவணப்பட வெளியீட்டு நிகழ்ச்சியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றிய சுதந்திர போராட்ட தியாகி முகம்மது முஸ்தபா அவர்கள் ஆற்றிய உரை… … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.