வ களத்தூர்: அத்துமீறும் இந்து முன்னணி அநீதி இழைக்கும் காவல்துறை

0

வ களத்தூர்: அத்துமீறும் இந்து முன்னணி அநீதி இழைக்கும் காவல்துறை

பெரம்பலூர் மாவட்டம், வ. களத்தூரில் 6,500 முஸ்லிம்களும், 3,500 சாதி இந்துக்களும், 2,000 தலித்களும் வாழ்ந்து வருகிறார்கள். வ. களத்தூரில் 1951, 1984, 1990, 2013 ஆகிய ஆண்டுகளில் மோதல்கள் நடைபெற்றுள்ளன. இதில் 1990ம் ஆண்டு பெரும் கலவரம் மூண்டது.

பிரச்சனைக்கு காரணம் வ. களத்தூரில் உள்ள 0.31 ஹெக்டேர் பரப்புள்ள ஒரு நத்தம் புறம்போக்கு இடம் (சர்வே எண் 119/1). இதற்கு அருகில்தான் இந்துக்களின் மயானமும், முஸ்லிம்களின் கப்ருஸ்தானமும் உள்ளது. பல்லாண்டுகளுக்கு முன்பு காரை அரைக்கும் சாந்து தொட்டியும், ஊர் பொதுவாக பயன்படுத்தப்பட்ட ஒரு கொல்லுப்பட்டறையும், மூலையில் நிறுத்தப்பட்ட பழைய தேர் ஒன்றும் இந்த புறம்போக்கு இடத்தில் அமைந்திருந்தன.

இந்துக்களில் சிலர் 1951ம் ஆண்டில் காரைத் தொட்டியை இடித்து ஒரு கீற்றுக் கொட்டகையை அமைத்தபோதுதான் முதன்முதலில் வ. களத்தூரில் மோதல் துவங்கியது. இரு தரப்பிலும் கைது நடவடிக்கைகள் நடந்தன. பிரச்சனையை அப்போதைய மாவட்ட நிர்வாகம் பேசி முடித்து வைத்தது. வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டன.

1984ம் ஆண்டு அந்த இடத்தில் ஏற்கனவே இந்துக்கள் தரப்பில் அமைத்த கீற்றுக் கொட்டகையை அகற்றி நிரந்தர கட்டிடம் ஒன்றை கட்டினர். அப்போது இதை கோவிலாக மாற்றும் முயற்சியாக கோவில் வாகனங்களையும், மேலும் ஒரு தேரையும் கொண்டு வந்து நிறுத்தினர். அப்போதும் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகம் இரு தரப்பையும் அழைத்துப் பேசி அந்த மண்டபத்தையும், தேரையும் தவிர்த்து மீதியுள்ள இடத்தை இரு தரப்பாரும் விழாக்காலங்களில் பயன்படுத்திக்கொள்ள ஆணையிட்டது.

ஆனால் 27.04.1990 நோன்பு பெருநாளில் அந்த இடத்தை முஸ்லிம்கள் கடந்து செல்லும்போது பெரும் கலவரம் மூண்டது. திட்டமிட்டு வெளியூர்களிலிருந்து ஆட்களை கொண்டுவந்து கலவரம் நடத்தப்பட்டது. அப்போது பள்ளிவாசல் இடிக்கப்பட்டது. வீடுகள் எரிக்கப்பட்டன. சொத்துக்கள் சூறையாடப்பட்டன. வழக்குகள் பதியப்பட்டு முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டனர். அந்த கலவரம் வ. களத்தூர் முஸ்லிம்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.