ஷம்புலால் ரீகரை தொடர்ந்து அக்லாக்கை கொலை செய்தவன் 2019 தேர்தலில் நொய்டா தொகுதியில் போட்டி

0

ஷம்புலால் ரீகரை தொடர்ந்து அக்லாக்கை கொலை செய்தவன் 2019 தேர்தலில் நொய்டா தொகுதியில் போட்டி

வருகிற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முஹம்மத் அஃரசூல் என்ற கூலித்தொழிலாளியை கொலை செய்த ஷம்புலால் ரீகர் விருப்பம் தெரிவித்ததாக செய்திகள் வெளியான நிலையில் மாட்டிறைச்சி உண்டதாகக் கூறி முகம்மத் அக்லாக்கை கொலை செய்தவர்களில் ஒருவனான ருபேந்திரா ரானா என்பவன் நொய்டா தொகுதியில் இருந்து போட்டியிடப் போவதாக உத்திர பிரதேஷ் நவநிர்மான் சேனா தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய நபர்களை தங்களது சார்பில் வருகிற நாடுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்து வரும் நவநிர்மான் சேனா தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து உத்திர பிரதேச நவநிர்மான் சேனா அமைப்பின் தலைவர் அமித் ஜானி கூறுகையில், “பசு மீது உள்ள மரியாதை காரணமாக 2.5 வருடங்கள் சிறையில் கழித்த ரானா பசுக்களை பாதுகாக்க சரியான நபர்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “பசுக்களை பாதுகாக்கப் போவதாக போலியான வாக்குறுதிகளை அளிப்பதற்கு பதிலாக 2015 இல் ரானா பசு பாதுகாப்பில் தனது ஈடுபாட்டை (அக்லாக் கொலை) நிரூபித்துள்ளார்.” என்று கூறியுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2015 அக்லாக் கொலை செய்யப்பட்ட பிசாடா கிராமத்தில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

Comments are closed.