ஷாஹின் பாக்: பெண்களின் எழுச்சி போராட்டம்!

0

ஷாஹின் பாக்: பெண்களின் எழுச்சி போராட்டம்!

9,10 மாதங்கள் கர்ப்பத்தில் குழந்தைகளை சுமந்து, பெற்றெடுத்து, பாலூட்டி வளர்த்த தாய் என்ற காரணத்தினால்தான் டெல்லியின் கடுங்குளிரிலும் என்.ஆர்.சி.க்கு எதிராக வீதியில் இறங்கி போராடுகிறோம்”.- தேசிய குடியுரிமை பதிவேடு (என்.ஆர்.சி.) மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சி.ஏ.ஏ.) எதிராகப் போராடும் 90 வயது மூதாட்டி அஸ்மா ஹாத்தூன் கூறிய வார்த்தைகள் இவை.

போராட்டம் துவங்கிய நாளிலிருந்தே அஸ்மா ஹாத்தூன் களத்தில் முன்னணியில் உள்ளார். போராட்டத்தை குறித்து கேட்டபோது அஸ்மா உணர்ச்சி மேலிட பதிலளித்தார். இந்த வயதான காலத்தில் போராட்டத்தில் கலந்து கொள்வது ஏன்? என்ற முதல் கேள்விக்கு அஸ்மா கோபாவேசத்துடன், “இந்த கேள்வியை மோடி, அமித் ஷாவிடம் கேட்க வேண்டும். அவர்கள் எங்களிடம் ஆவணத்தை கேட்கிறார்கள். என்னால் எனது 7 மூதாதையர்களின் பெயர்களை கூற முடியும்.” என்ற அஸ்மா இங்கே, இந்த மண்ணில், பிறந்து, வாழ்ந்து மரணித்த தனது மூதாதையர்கள் ஏழு பேரின் பெயர்களை வரிசையாக கூறினார். பின்னர் அவர், “இதுபோல பிரதமர் மோடியால் தனது மூதாதையர்களின் பெயர்களை கூற முடியுமா? குடியுரிமையை நிரூபிப்பதற்கான எந்தவொரு ஆவணத்தையும் நான் சமர்ப்பிக்க மாட்டேன்” என்றார். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.