ஸ்டேன் சுவாமியும் அர்னப் கோஸ்வாமியும்

0

ஸ்டேன் சுவாமியும் அர்னப் கோஸ்வாமியும்

83 வயது பாதிரியார் ஸ்டேன் சுவாமியை அக்டோபர் 23 அன்று பீமா கோரேகான் வழக்கில் தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ. கைது செய்தது. இவருடன் சேர்த்து இந்த வழக்கில் இதுவரை 16 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் இரண்டு வருடங்களுக்கும் அதிகமாக சிறையில் உள்ளனர். 1818இல் மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள பீமா கொரேகான் என்ற இடத்தில் உள்ளூர் பார்பன மன்னர் பேஷ்வா இரண்டாம் பாஜிராவ்விற்கு எதிரான போரில் ஆங்கிலேய இராணுவத்தில் இருந்த தலித் படையினர் வெற்றி அடைந்தனர். இவர்களில் பெரும்பான்மையினர் மகர் இனத்தை சார்ந்தவர்கள். இந்த வெற்றியை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1 அன்று தலித்கள் கொண்டாடி வருகின்றனர். 2018 கொண்டாட்டத்தின் போது உயர் சாதியினர் நடத்திய வன்முறையில் ஒருவர் கொல்லப்பட்டார்.

சங்பரிவார்களுடன் தொடர்புடைய சம்பாஜி பிடே மற்றும் பல வழக்குகளில் சிறை சென்ற பா.ஜ.க. கவுன்சிலர் மிலிந்த் ஏக்போடே ஆகிய இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இருவருக்கு எதிராகவும் வலுவான ஆதாரங்கள் இருந்த போதும் ஏக்போடே மட்டும் சில நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சம்பாஜியை காவல்துறை தொடவில்லை. ஆனால் அவரின் சீடர் துஷார் தாம்குடே என்பவர் கொடுத்த புகாரை தொடர்ந்து வழக்கு விசாரணை திசை மாறியது. இதே சமயம் புனேவை சேர்ந்த ஃபோரம் ஃபார் இன்டகிரேடட் நேஷனல் செக்யூரிட்டி என்ற ஆர்.எஸ்.எஸ்.  தொடர்பு அமைப்பு இந்த வன்முறையில் மாவோயிஸ்ட்களுக்கு தொடர்புடையதாக கூற ஆரம்பித்தது. ஆதற்கு முன்னரே அர்பன் நக்சல்கள் என்ற அடைமொழியை சங்பரிவார்களும் அவர்கள் ஆதரவு ஊடகங்களும் விளம்பரப்படுத்தி இருந்தன. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.