ஸ்பெயின் நாட்டு நீதிமன்றம் இஸ்ரேல் பிரமதருக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்துள்ளது

0

2010 ஆம் ஆண்டு பாலஸ்தீன மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற ஃப்ரீடம் ப்லோடிலா என்ற கப்பல் மீது இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் தொடுத்தது. இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தில் அந்த கப்பலில் இருந்த ஸ்பெயின் நாட்டு மனித உரிமை ஆர்வலர் ஒருவர் இது தொடர்பாக ஸ்பெயின் நாட்டு நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

ஐந்து வருடமாக கிடப்பில் கிடந்த இந்த வழக்கு விசாரணை கடந்த ஜூன் மாதம் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் கைவிடப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் தொடர்புடைய எந்த ஒரு அதிகாரியோ ஸ்பெயின் நாட்டிற்கு வருகை தந்தால் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வகையில் விடப்பட்டது.

ஆனால் மேல்முறையீட்டிற்காக ஸ்பெயின் உச்சநீதிமன்றம் சென்ற இந்த வழக்கு விசாரணை இஸ்ரேலின் அழுத்தினால் மந்தமாக சென்றது. எப்படியானலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்பெயின் நாட்டு போலீசிற்கு வழக்கில் குறிப்பிட்ட நபர்களை கைது செய்யுமாறு பிடி ஆணை பிறப்பித்துள்ளது. இந்த பிடி ஆணையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, முன்னால் வெளியுறவுத்துறை அமைச்சர் அவிக்டோர் லிபெர்மன், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் எஹுத் பராக் அன்றை துணை முதலமைச்சர்கள் மோஷே யாலோன், எலி யிஷாய் ஆகியோர் அடங்குவர்.

ஃப்ரீடம் ப்லோடிலா மீதி இஸ்ரேல் நடத்திய மனிதாபமற்ற தாக்குதலில் ஒன்பது அமைதி ஆர்வலர்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

Comments are closed.