ஸ்மிரிதி இராணி உதவியாளர் கொலை: முன்பகையே காரணம் என டிஜிபி திட்டவட்டம்!

0

பாஜக மக்களவை உறுப்பினர் ஸ்மிரிதி இராணியின் உதவியாளர் சுரேந்திர சிங் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ற காவல்துறையினர், மற்ற 2 குற்றாவாளிகளை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து உ.பி டிஜிபி கூறியதாவது: “சுரேந்திர சிங் அமேதியின் முன்னாள் பாஜக தலைவராக இருந்தபோது உள்ளூரில் முன்பகை இருந்துள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட விரும்பியுள்ளார். ஆனால் சுரேந்திர சிங் அவருக்கு மாறாக மற்றொரு வேட்பாளரை ஆதரித்தார். இதனால் அவரை திட்டமிட்டு துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது தொடர்பாக வஷிம், நசிம், கோலு, ராம்சந்திரா மற்றும் தர்மநாத் குப்தா ஆகியோரை கைது செய்துள்ளதாகவும், மேலும் இந்த கொலை தொடர்பில் மற்ற இரு குற்றவாளிகளை தேடி வருவதாகவும்” அவர் கூறினார்.

அவரது இறுதி ஊர்வலத்தில் சுரேந்திர சிங்கை துப்பாக்கியால் சுட்டவர்களுக்கும் அதற்கு காரணமானவர்களுக்கும் நீதிமன்றத்தில் மரண தண்டனை வாங்கித் தருவேன் என்று அவரது குடும்பத்தின் முன்பு உறுதியேற்றிருப்பதாகத் தெரிவித்தார்.

Comments are closed.