ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் இன்று வேட்புமனு தாக்கல் !

0

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி 27-ம் தேதி முடிவடைகிறது.

கடந்த 2011-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். கடந்த செப்டம்பர் மாதம் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால், அவர் தனது எம்எல்ஏ பதவி மற்றும் முதல்வர் பதவியை இழந்தார். இதையடுத்து தேர்தல் ஆணையம் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு பிப்ரவரி 13-ம் தேதி தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 16-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவு அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் எஸ்.வளர்மதி வேட் பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். திமுக சார்பில் ஏற்கெனவே ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த என். ஆனந்த் நிறுத்தப்பட்டுள்ளார்.

பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்னும் முடிவை அறிவிக்கவில்லை. இடைத்தேர்தலையொட்டி திருச்சி மாவட்டம் மற்றும் அதன் அருகி லுள்ள புதுக்கோட்டை மாவட்டத் தில் ஒரு ஊராட்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப் பட்டுள்ளன. கட்சிகள், வேட்பாளர் கள், அமைச்சர்களுக்கு 91 வகையான கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Comments are closed.