ஸ்ரீ ரவிசங்கரை தனது வாகனத்தில் விமான நிலையம் அழைத்துச் சென்ற கவ்ஹாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

0

கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்ற மாநாடு ஒன்றிற்காக கவ்ஹாத்தி வந்திருந்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை தனது காரில் ஏற்றி விமான நிலையம் வரை அவருக்கு ஓட்டுனர் போன்று செயல்பட்டுள்ளார் கவ்ஹாத்தி உயர்நீதிமன்ற நீதிபதி அஜித் சிங்.

இவரின் இந்த செயல் மூலம், அவர் உயர்நீதிமன்ற விதிகளை மீறிவிட்டார் என்பதால் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்திற்குள் பெரும் அதிருப்தியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த பிரச்னையை வருகிற கவ்ஹாத்தி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க கூட்டத்தில் விவாதிக்கவும் அதன் உறுப்பினர்கள் முடிவெடுத்துள்ளனர். இன்னும் இந்திய தலைமை நீதிபதியிடம் கவ்ஹாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து புகாரளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Comments are closed.