ஹஜ் ஒதுக்கீடு: மோடி பாணியை பின்பற்றிய முக்தர் அப்பாஸ் நக்வி

0

சவூதி அரேபியா மக்காவில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்றதை தொடர்ந்து ஹஜ் பயணிகளின் ஒதுக்கீடு இந்தியாவிற்கு கடந்த மூன்று வருடங்களாக 20% குறைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த விரிவாக்கப்பணிகள் முடிவடைந்ததுள்ளதை அடுத்து இவ்வருடத்தில் இருந்து சவூதி அரசு இந்தியாவிற்கான ஹஜ் ஒதுக்கீடை 1,35,903 இல் இருந்து 1,70,403 ஆக உயர்த்தியுள்ளது.

இதனை அறிவித்த தேசிய சிறுபான்மைதுறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, சவூதி அரசு இதியாவிற்கான ஹஜ் ஒதுக்கீட்டை 34,500 எண்ணிக்கை அதிகப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.  மேலும் இது 1988 இல் இருந்து இது தான் அதிகப்படியான எண்ணிக்கை அதிகரிப்பு என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் இவரது இந்த கூற்று பா.ஜ.க விற்கே உரித்தான போலி கூற்றாகும். முஸ்லிம்கள் அதிகம் உள்ள உத்திர பிரதேச தேர்தலை ஒட்டி அங்குள்ள முஸ்லிம்களை மகிழ்விக்க பா.ஜ.க. அரசில் தான் இத்தகைய எண்ணிக்கை அதிகரிப்பு நடத்துள்ளது என்பது போன்ற தோற்றத்தை அவர் ஏற்படுத்த முனைந்துள்ளார். மக்கா மற்றும் மதினாவில் விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதற்கு முன்னதாக 2013 ஆம் ஆண்டு இந்தியாவின் ஹஜ் ஒதுக்கீடு 1,75,000 ஆக இருந்துள்ளது. அப்போது காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஹஜ் கமிட்டியில் பணியாற்றிய முன்னால் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், பா.ஜ.க. அரசு இந்த விஷயத்தில் நற்பெயர் எடுக்க வேண்டுமானால் 2011  கணக்கெடுப்பின்படி இந்தியாவிர்கான ஹஜ் ஒதுக்கீட்டை வழங்க சவூதி அரசை சம்மதிக்க வைத்திருக்க வேண்டும். ஆனால் இவர்களோ போலியான கூற்றை வைத்து பெருமை தேடுகிறார் என்று கூரியுள்ளார்.

Comments are closed.