ஹஜ் பயணிகளுக்கு இண்டர்நெட் வசதியுடன் இலவச சிம்கார்டு வழங்க சவுதி அரசு முடிவு

0

புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகL தங்கள் உறவினர்களோடு உறவாடும் வகையிலும், தங்களது ஹஜ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வகையிலும், இண்டர்நெட் வசதியுடனான சிம் கார்டுகளை இலவசமாக வழங்க சவுதி அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, சுமார் 1 மில்லியன் சிம் கார்டுகளை இலவசமாக வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டு, அவர்கள் 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஹஜ் கடமைக்காக பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தருவோருக்கு, சவுதி மன்னர் சல்மான் இத்திட்டத்தை அறிவித்து உள்ளனர்.

இதுகுறித்து கூறிய இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவர் அபுபக்கர், ஹஜ் பயணிகளுக்கு சவுதி தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சிம்கார்டுகளை இந்திய ஹஜ் கமிட்டி பெற்று இலவசமாக வழங்கும் என்றும், இந்த சிம் கார்டுகளில், இந்திய ஹஜ் கமிட்டி உறுப்பினர்களின் தொலைபேசி எண்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்கும். மேலும் மக்காவில் உள்ள அதிகாரிகளின் எண்களும், அவசரகால சேவைப் பிரிவுகளின் எண்களும் இடம்பெற்றிருக்கும் என தெரிவித்துள்ளார்.

Comments are closed.