ஹஜ் 2015: மினாவில் ஏற்பட்ட நெரிசலில் எழுநூறுக்கும் மேற்பட்டவர்கள் மரணம்

0

ஹஜ் கிரியைகளின் போது மினா பகுதியில் இன்று (செப்டம்பர் 24) ஏற்பட்ட நெரிசலில் எழுநூறுக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். 800க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்துள்ளனர். ஷைத்தானுக்கு கல் எறிய செல்லும் போது இந்த நெரிசல் ஏற்பட்டது. நெரிசல் ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. சவூதி இளவரசர் முகம்மது பின் நயீஃப் விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை அறிவதற்கான குழுவை அமைத்துள்ளார்.
செப்டம்பர் 11 அன்று மக்கா புனித பள்ளியில் உள்ள ராட்சச கிரேன் விழுந்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் இறந்தனர். அதனை தொடர்ந்து இந்த விபத்தும் ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மினாவில் ஏற்பட்ட நெரிசலில் தமிழத்தை சேர்ந்த இருவர் உட்பட இந்தியர்கள் பதினான்கு பேர் இறந்துள்ளதாக ஜித்தாவில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

ஹஜ் யாத்ரிகர்களுக்கு சேவையாற்ற சென்ற இந்தியா ஃபிரடர்னிட்டி ஃபோரத்தின் உறுப்பினர் நியாசுல் ஹக் (ஜார்கண்ட்) என்பவரும் இந்த நெரிசலில் சிக்கி மரணமடைந்ததாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

Comments are closed.