ஹாதியா வழக்கு – ஒரு திருமணத்தை உயர் நீதிமன்றம் எவ்வாறு ரத்து செய்ய முடியும்: உச்ச நீதிமன்றம் கேள்வி

0

கேரள மாநிலத்தை சேர்த்த ஹாதியா வின் திருமணத்தை இந்து மதத்தை பின்பற்றும் அவரது பெற்றோர் விரும்பவில்லை என்ற காரணத்தினால் அது லவ் ஜிஹாத் என்று அவதூறு பரப்பட்டது. இது தொடர்பாக வழக்கும் கேரள உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. நீதியை நிலைநாட்ட வேண்டிய உயர் நீதிமன்றமோ 24 வயது நிரம்பிய மருத்துவ பணியாற்றி வந்த ஹாதியாவின் திருமணத்தை லவ் ஜிஹாத் என்று கூறி ரத்து செய்து அது தொடர்பாக விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது. மேலும் ஹாதியாவை அவரது பெற்றோருடன் அவரது விருப்பத்திற்கு மாறாக அனுப்பி வைத்தது.

இந்நிலையில் இது தொடர்பாக ஹாதியாவின் கணவர் ஷஃபீன் ஜஹான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கு விசாரணையின் போது உயர் நீதிமன்றம் எவ்வாறு ஒரு திருமணத்தை ரத்து செய்ய முடியும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி A.M.கான்வில்கர், மற்றும் நீதிபதி D.Y.சத்திரசூத் அடங்கிய பென்ச் இந்த வழக்கு விசாரணையை வருகிற அக்டோபர் 9 தேதி விசாரிக்க உள்ளனர். இது குறித்து கருத்து கூறிய நீதிபதி மிஸ்ரா, “சட்டப்பிரிவு 226 இன் கீழ் ஒரு திருமணத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்ய இயலுமா என்பது தான் தற்போதைய கேள்வி” என்று கூறியுள்ளார்.

ஷஃபின் மற்றும் ஹாதியா திருமணத்தை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து அதற்கு எதிராக ஷஃபின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கி விசாரித்த அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி J.S.கெஹர், ஹாதியா அவரது தந்தை கூறுவது போன்று ஏமாற்றப்பட்டு மதம் மாற்றப்பட்டாரா என்று தேசிய புலனாய்வுத்துறை விசாரிக்க உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னர் ஹாதியாவின் கருத்தையும் கேட்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

கடந்த வாரம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து நீதிபதி J.S. கெஹர் ஓய்வு பெற்றதை தொடர்ந்து ஷஃபின் ஜஹான் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகி NIA தொடர்பான அதன் முந்தைய உத்தரவை திரும்பப் பெறும்படி விண்ணப்பித்தார்.

ஷஃபின் ஜஹான் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, “இந்த வழக்கில் NIA விசாரணைக்கு உத்தரவிட்டது, இந்தியாவின் பல வழிபாட்டு சமூகத்தின் அடிப்படையையே அசைக்கிறது” என்றும் “உலகமெங்கும் இது மோசமான செய்தியை அனுப்புகிறது.” என்றும் கூறினார். இதை தவே கூறிய விதத்திற்கு ஆட்சேபனை தெரிவித்த நீதிபதிகள்,” அவர் மிகவும் சப்தமாக பேசுவதாகும் அதனால் தங்களுக்கு எதுவும் கேட்கவில்லை என்றும் நீதிபதிகள் கூறினர். தனது வாதத்தை மீண்டும் அழுத்தமாக தெரிவித்த வழக்கறிஞர் தவே, பாஜகவின் இரண்டு மூத்த தலைவர்கள் சிறுபான்மை சமூகத்தில்தான் திருமணம் முடித்துள்ளனர் அதனால் அவர்களின் விஷயத்திலும் NIA விசாரணை உத்தரவிடப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் கூறிய அவர் இந்த வழக்கில் NIA விசாரணைக்கு உத்தரவிட்டு தங்களது அதிகாரத்தை நீதிமன்றமே மீறியுள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்த வழக்கில் மாநில அரசு மனுதாரராக இல்லை, மத்திய புலனாய்வுத் துறையும் மனுதாரராக இல்லை. இங்கு NIA விசாரணைக்கு எந்த தேவையும் இல்லாத போது  தேவைக்கு அதிகமாக அதனை உத்தரவிட்டு நீதிமன்றம் தங்களது அதிகாரத்தை மீறியுள்ளது என்று அவர் கூறினார்.

இது குறித்து தனது கருத்தை தெரிவித்த தலைமை நீதிபதி, இந்த வழக்கில் 2 சட்டப் பிரச்சனைகள் தீர்க்கப்பட உள்ளது. முதலாவதானது ஒரு 24 வயது நபரின் திருமணத்தை நீதிமன்றத்தால் ரத்து செய்ய முடியுமா என்பது என்றும் இரண்டாவது இந்த வழக்கில் தேசிய புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது என்று கூறியுள்ளார்.

மேலும் NIA விசாரணை குறித்து நீதிமன்றம் தனது தேவைக்கு அதிகாமாக சென்றுள்ளது என்று தவே கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய நீதிபதி, ஒவ்வொரு வழக்கின் சூழ்நிலை மற்றும் தன்மையை குறித்து நீதிமன்றம் தனது தேவையை முடிவு செய்யும் அதிகாரத்தை பெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த விசாரணையின் போது NIA தரப்பில் ஆஜராகும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனெரல் (ASG) மணிந்தர் சிங் நீதிமன்றத்தில் இல்லை. அவருக்கு பதிலாக ஆஜரான ASG துஷார் மேதா, வழக்கிஞர் தவே கூறிய அனைத்து விஷயங்களும்  NIA  விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட போது கருத்தில் கொள்ளப்பட்டது என்று தெரிவித்தார். மேலும் கூறிய அவர், எங்களை இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க நீதிமன்றமே உத்தரவிட்டது என்றும் மேலும் தாங்கள் இதில் ஒரு தொடர்பு இருப்பதாக கண்டறிந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் நீதிமன்றத்தை இது தொடர்பாக திருப்தி படுத்த முடியும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் வழக்கு தொடர்பாக கருத்து தெரவித்த தலைமை நீதிபதி, ஹாதியா ஒரு 24 பெண் என்பதால் அவரது கட்டுப்பாட்டை அவரின் தந்தை எடுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பத்திரிகையாளர்களுக்கு தனது கருத்தை தெரிவித்த ஹாதியாவின் தந்தை அசோகன், தான் நீதிமன்ற உத்தரவை மதிக்கபோவதாகவும், NIA தங்களது அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் அதனை தனது மகளுக்கு வாசித்துக் காட்டப் போவதாகவும் அத்துடன் தனது கடமை முடிந்துவிட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் NIA வின் அந்த அறிக்கை இஸ்லாத்தை தேர்தெடுத்தது மூலம் ஹாதியா தேர்தெடுத்த அபாயகரமான பாதையில் இருந்து அவரை விடுவிக்கும் என்று தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.