ஹரியானாவில் மாட்டிறைச்சி வைத்திருந்த இஸ்லாமியர்கள் மீது பசு குண்டர்கள் தாக்குதல்: பாதிக்கப்பட்டவர்கள் கைது!

0

ஹரியானா மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக இரண்டு இஸ்லாமியர்கள் மீது பசு குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள இஸ்லாம்பூர் என்ற கிராமத்தில், பாவல் மாவட்டத்தை சேர்ந்த ஷாத்தில் அகமது மற்றும் சையத் உள்ளிட்டோர் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அந்த வழியாக சென்ற பசு குண்டர்கள் 4 பேர், வாகனங்களில் மாட்டிறைச்சியை பார்த்ததும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக பாதிக்கப்பட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் மாட்டிறைச்சியை டெல்லிக்கு கொன்ற போது கைது செய்த போலீசார், அவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்வதவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் கூறினர்.

Comments are closed.