ஹரியானாவில் வெளிநாட்டினருக்கு மாட்டிறைச்சி உண்ண அனுமதி உண்டு, இந்தியர்களுக்கு இல்லை

0

ஹரியானாவில் வசிக்கும் வெளிநாட்டினர்களுக்கு சிறப்பு உரிமம் மூலம் மாட்டிறைச்சி உண்ண அனுமதி வழங்குவது பற்றி ஆலோசித்து வருவதாக ஹரியானா முதல்வர் மனோகர் கட்டார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்து பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின் படி, “வெளிநாட்டினர் மாட்டிறைச்சி உண்பதற்காக ஒரு வகையான சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும், அதனை நாங்கள் செய்வோம். அது ஒரு சிறப்பு உரிமமாக கூட இருக்கலாம். எதுவெல்லாம் உரிமம் பெறப்பட்டுள்ளதோ அதனை சட்டப்படி எவரும் எதிர்க்க முடியாது” என்று அவர் கூறியதாக தெரிகிறது.

மேலும் ஹரியானாவில் மாட்டிரைச்சிகான தடை ஹரியானா பழக்க வழக்கத்தை பாதுகாக்க என்று அவர் கூறியுள்ளார். “ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை முறை உள்ளது, குறிப்பாக வெளிநாட்டினருக்கு, எங்களுக்கு அதன் மீது எந்த எதிர்ப்பும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் நாங்கள் இதனை யாருக்காவும் எதிர்க்கவில்லை” என்று மனோகர் கட்டார் கூறியுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் இவர், “முஸ்லிம்கள் இந்த நாட்டில் வாழ வேண்டும் என்றால் மாட்டிறைச்சி உண்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் ஏனென்றால் பசு வழிபாட்டிற்குறியது என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் பத்திரிகையாளர்களிடம் தனது கூற்று திரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்று விளக்கமளித்தார். ஆனால் அவரது பேச்சு அடங்கிய ஆடியோ வெளியாகி அவரது பொய்யை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.