ஹரியானா அரசு கோசாலையில் பசியால் உயிரிழந்த 25 பசுக்கள்

0

ஹரியானா மாநிலம் மதனா கிராமத்தில் அரசு பராமரிப்பில் உள்ள கோசாலையில் 25 பசுக்கள் தொடர்ச்சியான மழையினாலும் போதிய உணவு இன்றியும் உயிரிழந்துள்ளது.

அப்பகுதியில் தொடர்ச்சியான மழையின் காரணமாக அந்த பசுக்கள் பராமரிக்கப்பட்டு வந்த கோசாலையில் நீர்த்தேக்கம் அதிகமாகியுள்ளது. இதனை எவரும் சரி செய்யாத காரணத்தினால் அந்த சகதியில் சிக்குண்டு சில பசுக்கள் உயிரிழந்துள்ளன. மேலும் சில பசுக்கள் போதிய உணவின்மையால் பசியால் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஹரியானா காவ் சேவா கமிஷன் தலைவர் பாணி தாஸ் மங்களா மற்றும் சில மாவட்ட நிர்வாக ஆதிகாரிகள் சம்பந்தப்பட்ட கோசாலையை பார்வையிட்டுள்ளனர். அங்குள்ள நோயால் பதிக்கப்பட்ட இன்னும் சில பசுக்களை அருகில் உள்ள கர்னால் கோசாலைக்கு மாற்றம் செய்துள்ளனர். மற்ற பசுக்கள் அனைத்தும் இந்த கோசாலையில் பராமரிப்பு பணி முடியும் வரை அந்த மாவட்டத்தில் உள்ள வேறு 20 கோசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலை குறித்து இந்த கோசாலைக்கு கால்நடை உணவு வழங்கும் ஸ்ரீ கிருஷன் காவ்சாலா வின் முன்னால் தலைவர் அசோக் பாப்நேஜா கூறுகையில், “இந்த கோசாலையில் தற்போது 600 க்கும் மேற்பட்ட பசுக்கள் உள்ளன. ஆனால் இங்கு போதுமான வசதி இல்லை. இத்துணை பசுக்களுக்கு உணவோ அல்லது குடிநீரோ இருப்பதில்லை.“ என்று கூறியுள்ளார்.

மாவட்ட நிர்வாகத்தால் துவங்கப்பட்ட இந்த கோசாலையை பாராமரிக்கும் பணி கிராம பஞ்சாயத்து மற்றும் மாநில விலங்கு வளர்ப்புத்துறையுடையது என்று கூறியுள்ளார்.

இது குறித்து விலங்கு வளர்ப்புத்துறையின் மாவட்ட துணை இயக்குனர், மருத்துவர் தர்மிந்தர் சிங், தங்களது துறை விலங்களின் மீது முறையான அக்கறை செலுத்துகிறது என்றும் இந்த பசுக்கள் அனைத்திற்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் ஆனால் சில பலகீனமான பசுக்கள் சகதியில் சிக்குண்டு சில நாட்களில் உயிரிழந்துள்ளது என்றும் கூறியுள்ளார். மாட்டிறைச்சி உண்டதாக குறை கூறியும், வீட்டின் அருகே பசு ஒன்று இறந்து கிடந்ததால் குடுபத்துடன் அடித்து கொலை செய்யவும் துணியும் பசு பயங்கர வாதிகள் அரசால் பராமரிக்கப்பட்டு வரும் கோசாலையின் இந்த நிலை குறித்து எந்த ஒரு கவலையும் கொண்டதாக தெரியவில்லை.

Comments are closed.