ஹரியானா: தொடரும் பசு குண்டர்களின் அத்துமீறல்கள்

0

(Image: Representative image only)
ஹரியானாவில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் பசு குண்டர்கள் நிகழ்த்தி வரும் அத்துமீறல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அக்டோபர் 13 அன்று ஆட்டோவில் சென்று கொண்டிருந்த நபர்களை பசு இறைச்சியை கடத்துவதாகக் கூறி பஜரங் தளத்தின் குண்டர்கள் தாக்கியுள்ளனர். தான் கொண்டு செல்வது எருமை இறைச்சி என்றும் பசு இறைச்சி அல்ல என்று கூறிய போதும் எட்டு முதல் பத்து நபர்களை கொண்ட கும்பல் இவர்களை கடுமையாக தாக்கியுள்ளது.
தாக்கப்பட்டவர்களில் ஒரு சிறுவனும் மாற்றுத் திறனாளியும் அடங்குவர் என்று கூறப்படுகிறது. பசு இறைச்சியை கடத்துவதாகக் கூறி பஜ்ரங் தள குண்டர்கள் ஆசாத் மற்றும் அவருடன் சென்ற 13 வயது சிறுவனை தாக்கியுள்ளனர். தாக்குதலில் இருந்து அவர்களை காப்பாற்ற முற்பட்ட அஹ்ஸான், செஹ்ஸாத் ஆகியோரும் தாக்கப்பட்டனர். இதில் ஆசாத் என்ற நபருக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. காவல்துறை உரிய நேரத்தில் வரவில்லையென்றால் பஜ்ரங் தளத்தினர் இவர்களை அடித்தே கொலை செய்திருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களின் புகாரின் அடிப்படையில் முப்பது நபர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இறைச்சியை தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ள காவல்துறை, பாதிக்கப்பட்டவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது.

Comments are closed.